புதைக்க இடமில்லாமல் 3 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டி எடுப்பு..!
பிரேசிலில் கொரோனா பாதித்தோரின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் 3 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட சடலங்களை அப்புறப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது உலக நாடுகளையும் பார்க்க செய்துள்ளது.
பிரேசிலில் கொரோனா பாதித்தோரின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் 3 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட சடலங்களை அப்புறப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது உலக நாடுகளையும் பார்க்க செய்துள்ளது.
பிரேசிலில் இதுவரை கொரோனா வைரசால் சுமார் 8 லட்சத்து 67 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 43,389 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது புதைப்பதற்கு இடமில்லை என 3 வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்ட சடலங்களை அப்புறப்படுத்தி வரும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிபர் பொல்சொனாரோ தான் இவை எல்லாவற்றிற்கும் காரணம் என பிரேசிலில் பல தரப்பினர் குற்றம் சுமற்றி வருகின்றனர்.
பிரேசிலில் கொரோனா பரவிய துவங்கிய போது அமெரிக்கா போல பிரேசிலும் இது ஒரு சாதாரண காய்ச்சல் போல் தான் என பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இவ்வளவு பாதிப்பு ஏற்பட்ட பின்பும் அவர் தற்போதும் தன் நிலையை மாற்றிக்கொள்ள வில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும் பிரேசிலில் சில மாகாணங்களின் ஆளுநர்கள் மக்களிடம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்குமாறு கூறியபோதும் அதிபர் பொல்சொனாரோ ஆதரவாளர்கள் பேரணிகளை மேற்கொண்டு அசட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளனர்.
உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா அச்சப்படும் அளவிற்கு மிக பெரிய நோயல்ல என்பதை நிரூபிக்க அவர் எடுக்கும் நடவடிக்கைகள் பிரேசிலை மேலும், மேலும் படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கின்றன. பிரேசிலில் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 9 ஆயிரம் ரூபாய் வீதம் கொரோனா கால நிதி உதவி வழங்கப் பட்டுள்ளதால் பெரிய அளவில் அதிபருக்கு எதிர்ப்பில்லை.
சில வாரங்களுக்கு முன் பிரேசில் தனது அரசின் இணையதளத்தில் இருந்து கொரோனா பாதித்தோரின் புள்ளி விவரங்களை நீக்கியது. மேலும் புதிதாக பாதித்தோரின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை. இதன் காரணமாக உடனடியாக உச்சநீதிமன்றம் தலையிட்டு பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிடுவதை நிறுத்தக் கூடாது என கண்டித்த பின் மீண்டும் விவரங்கள் வெளியாகி வருகின்றன.