யார் என்று தெரியாமல் சகோதரியை திருமணம் செய்து கொண்ட இளைஞர் ! மரபணு பரிசோதனையில் தெரிய வந்ததால் அதிர்ச்சி !!

காதல் மனைவியாக வாய்த்தவர், தனது சகோதரி என்று மரபணு பரிசோதனையில் தெரிய வந்ததால் இளைஞன் அதிர்ச்சியடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

brother married sister

இங்கிலாந்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்காமல் ‘ரெட்டிட்’ என்ற சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் எனக்கும் என் கர்ப்பிணி மனைவிக்கும் ஒருவரே தந்தை என்பதை அறிந்தோம். 

அதை உறுதி செய்ய இருவரும் தனித்தனியாக மரபணு பரிசோதனை செய்தோம். அதில் என் மனைவி எனது சகோதரி என்பது தெரியவந்துள்ளது. 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நாங்கள் இருவரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டோம். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் எங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறோம்.

என் அம்மாவும் என் மனைவியின் அம்மாவும் எங்களின் தந்தை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. அவரும் எங்களுடன் இல்லாததால் தெரியவில்லை. இந்த பிரச்சினையால் பிறக்க போகும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? உங்கள் ஆலோசனை தேவை  என தெரிவித்துள்ளார்.

brother married sister

இதை தெரிந்துகொண்ட பிறகும் எங்கள் உணர்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எங்களை யாரும் பிரிக்க விடமாட்டேன். அவளும் அதை விரும்பமாட்டாள். எங்களுக்கு என்ன நடக்கும்? நாங்கள் என்ன செய்ய வேண்டும்? இதை அப்படியே புதைத்துவிடவா? இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதற்கு ஏராளமானோர் பதில் அளித்து அவருக்கு ஆலோசனைகளை வழங்கினர். அதில் ஒருவர், “நீங்கள் இன்னும் அன்பு செலுத்துகிறீர்கள் என்றால், ஒன்றாக இருங்கள். குழந்தையை உங்களுடன் வைத்துக்கொள்ள விரும்பினால் வைத்துக்கொள்ளுங்கள். இதுபற்றி யாரிடமும் சொல்லாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

brother married sister

மற்றொருவர் “உங்கள் காதல் வலுவாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இதைத் தேர்வு செய்யவில்லை, எனவே மறந்துவிடுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்” என கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios