இங்கிலாந்தில் அலறல்... பிரதமர் ஜான்சனுக்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்பு..!

கடந்த 24 மணி நேரமாக எனக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இப்போது நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.

british pm boris johnson tests positive for covid

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது என்பது இதுவே முதன்முறை.

நேற்று முன்தினம் இங்கிலாந்து இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகனுமான சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. british pm boris johnson tests positive for covid

இதுகுறித்து போரிஸ் தனது ட்விட்டர் பதிவில், 'கடந்த 24 மணி நேரமாக எனக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இப்போது நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். இருப்பினும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை நான் வழி நடத்துவேன். நாம் ஒன்றிணைந்து இந்த கொரோனாவை விரட்டி அடிப்போம். உயிர்களை காக்க வீட்டிலேயே இருங்கள்' என்று கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios