பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ,  ஊரடங்கு உத்தரவை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் தோமினிக் ராப் தெரிவித்துள்ளார் .  பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்  கொரோனாவில் இருந்து  குணமடைந்துள்ள நிலையில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி பின்னர் அறிவிப்பார் என தோமினிக் ராப் தெரிவித்துள்ளார் .  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது .  இதுவரை இந்த வைரசுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இதுவரை உலக அளவில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து  896 பேர்  இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் .  அமெரிக்கா , ஸ்பெயின் , இத்தாலி ,  பிரான்ஸ் ,  ஈரான் ,  துருக்கி ,  பெல்ஜியம் ,  உள்ளிட்ட நாடுகள் மீது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . ஆனால்  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்கா  மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது .  

அதேநேரத்தில் பிரிட்டனிலும்  சுமார் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 93 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது .  சுமார் 13 ஆயிரத்து 729 பேர் உயிரிழந்துள்ளனர் .  மேலும் அங்கு உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அந்நாட்டில் தொற்று நோயியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.  இதானல் வைரஸ் பரவலை கட்டுபட்டுத்த  ஏற்கனவே இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வரும் நிலையில் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு  செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்காக், இந்த வாரம்  டவுன் வீதியில்  உள்ள அரசு அலுவகத்தில்  அடுத்த மூன்று வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.  பிதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடக்கும் அந்த கூட்டதில் அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வைரஸ் இங்கிலாந்தில் உச்சக்கட்டத்தை  அடைந்துள்ளது , இது ஒரு நல்ல செய்தி என்றாலும்கூட இந்த வைராஸ் அதன் தன்மையில் இருந்து குறையவில்லை என தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தாக்கம்  அடுத்து வரும் நாடுகளில் எப்படி உள்ளது என்பதை பொறுத்தே சரியான முடிக்கு  வரமுடியும் என தெரிவித்துள்ளார் . அதேநேரத்தில் தற்போது நாங்கள் இந்த வைரஸ் தொடர்பான தகவல்களை வெளியிட விரும்பவில்லை ,  ஏனெனில் அந்த வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என அவர் கூறியுள்ளார் .  இந்நிலையில்  ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது.   சமூக விலகல் நடைமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இந் நிலையில் அயர்லாந்து மே-9 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது .  இந்நிலையில் பிரிட்டனில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நீட்டிக்க எதிர்க்கட்சியும்  தனது ஆதரவை ஏற்கனவே அளித்துள்ளது . 

அதே நேரத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் இருந்து நாடு எப்படி மீள போகிறது எனவும் எதிர் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது . இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை  செயலாளர் தோமினிக் ராப் க்கு ,   தொழிலாளர்கள் அமைப்பின்  தலைவர் கெய்ர் ஸ்டார்மர், எழுதியுள்ள கடிதத்தில்  மில்லியன் கணக்கான பிரிட்டனியர்கள் விதிகளைப் பின்பற்றுகையில், எதிர்காலத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து அவர்களுக்கு சில தெளிவான யோசனை தேவை என்று அரசை வலியுறுத்தியுள்ளார்.  அதே நேரத்தில்  பொதுமக்கள் நம்பிக்கையைப் பெறுவதற்கு நோய்தாக்கம் குறித்து  அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்வது தான் சிறந்த வழி எனவும் விலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் கூட உள்ள அமைச்சரவை கூட்டத்தில் இங்கிலாந்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.