இந்த அளவிற்கு ஒரு கொடுமைக்கார ஜனாதிபதியா..!! வல்லரசுகள் காதில் பூ சுற்றிய பொல்சனரோ..!!

சுமார் 30 லட்சம் மக்கள் தற்போது பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் ,  ஆனால் அரசு சுமார் 2 லட்சம் பேர்தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் கூறி வருகிறது என்றும் சாவோ பாலோ மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

brazil president bolsonaro not worried about corona

அமெரிக்கா ஐரோப்பாவை தொடர்ந்து லத்தீன் அமெரிக்க நாடுகள் கோவிட்- 19 நோய்த்தொற்றின் அடுத்த மையமாக உருவெடுத்துள்ளனதாகவும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பை விட தற்போது அதிக எண்ணிக்கையிலான மக்கள் உலகின் மேற்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  இதுவரையில் 47 லட்சம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று  ஏற்பட்டுள்ளது உலக அளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  3 லட்சத்து 13  ஆயிரத்தை கடந்து உள்ளன ,  அமெரிக்கா ஸ்பெயின் ரஷ்யா பிரிட்டன் பிரேசில் இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் இந்த வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது.  அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக அமெரிக்க தலைநகர் நியூயார்க்கும் ,  ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மாறியுள்ளன . 

brazil president bolsonaro not worried about corona

இந்நிலையில் இந்த இரு பெரும் நகரங்களுக்கு மாற்றாக தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகள்  கொரோனா மையமாக  மாறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.  அமெரிக்காவில் மட்டும் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  வட அமெரிக்க கண்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ,  தென் அமெரிக்க கண்டத்தில் அதாவது இலத்தீன் அமெரிக்காவில் பிரேசில் மெக்சிகோ பெரு உள்ளிட்ட நாடுகள்  கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.  ஏற்கனவே வேலையின்மை வறுமை உள்ளூர் கலவரங்கள் எனப்பல பிரச்சினைகளில் சிக்கியுள்ள பல்வேறு இலத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல் மற்றும் சமூக வாழ்வியலில் கொரோனா பாதிப்பு  பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது .  குறிப்பாக அமேசான் காடுகளையொட்டி  அமைந்துள்ள பிரேசிலின் பல நகரங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது .  பெரு நாட்டின் அனைத்து நகரங்களும் கொரோனா பாதிப்பில் சிக்கியுள்ளன. பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 281 பேர்  மரணமடைந்துள்ளனர் .

 brazil president bolsonaro not worried about corona

அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது .  பிரேசிலில் கொரோனா பாதிப்பு பொல்சனரோ அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விட 15 மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்றும்,  சுமார் 30 லட்சம் மக்கள் தற்போது பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் ,  ஆனால் அரசு சுமார் 2 லட்சம் பேர்தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் கூறி வருகிறது என்றும் சாவோ பாலோ மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மெக்சிகோவை பொருத்தவரை பாதிப்பு 40 ஆயிரத்தை எட்டியுள்ளது ,  சுமார் 4000 பேர் பலியாகியுள்ளனர் ,  மெக்சிகோ சிட்டி நகரத்தில் தான் பாதிப்பு கடுமையாக உள்ளது ,  அதேபோல் பிரேசில் தலைநகரிலும் மெக்சிகோ தலைநகரிலும் பாதிப்பு தீவிரமாக உள்ளபோதிலும் அங்குள்ள  அரசுகளின் ஆதரவுடன் பெரும் நிறுவனங்கள் ஊரடங்கு பற்றி கவலைப்படாமல் தொழிலாளர்கள் கட்டாயம் வேலைக்கு வரவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாகவும்,  தொழிற்சங்கங்கள் புகார் எழுப்பியுள்ளன. 

brazil president bolsonaro not worried about corona

இது அரசுகளும் பெரும் முதலாளிகளின் நலன்களே முக்கியம் என குறிப்பிடும் விதத்தில் மக்கள் வேலைகளுக்கு திரும்பினால் தான் இந்த கொரோனா கதைகள்  முடிவுக்கு வரும் என்றும் பிரேசில் அதிபர் பொல்சனரோ கூறியிருக்கிறார், இவரின் பேச்சு பெருவாரியான மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது . 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios