செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகிழ்ச்சி - டிரம்ப் என்ன ஆனார் ?
அமெரிக்காவில் நடந்த மிட் டெர்ம் தேர்தலில் ஜனநாயக கட்சி மீண்டும் பெரும்பான்மையை பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அதிபர் பைடன் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவில் ஒவ்வொரு நான்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை அதிபர் தேர்தல் நடப்பது வழக்கம். அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து இரு ஆண்டுகளுக்குப் பின் இந்த மிட்-டெர்ம் தேர்தல்கள் நடைபெறும்.
புதிய அதிபர் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடைபெறுவதால், இது ஆட்சியின் மீது மக்களின் எண்ணம் எப்படி இருக்கிறது என்பதே பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இதை வைத்தே ஆளும் கட்சியின் மீது மக்களுக்கு எந்த மாதிரியான எண்ணம் இருக்கிறது என்பதை கணிக்கலாம். 100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
இதையும் படிங்க..அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஊத்தப்போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம்
35 இடங்களுக்கு மிட் டேர்ம் தேர்தல் நடக்கும். சுமார் 435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இதில் உள்ள அனைத்து இடங்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். விலைவாசி உயர்வு, பைடன் ஆட்சி மீதான அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தத் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வெல்ல முடியாது என்று பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியது.
இதையும் படிங்க..கணவருடன் இருக்க முடியல.. பிரியங்கா காந்தி சொன்னது இதுதான் - கண் கலங்கிய நளினி !
இந்த கருத்துக் கணிப்பைப் பொய்யாக்கும் வகையில் ஜனநாயக கட்சி இதில் மீண்டும் பெரும்பான்மையை பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அதிபர் பைடன் தெரிவித்து உள்ளார். பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சியின் கையே ஓங்கியுள்ளது. மிட்டேர்ம் தேர்தலில் சுமார் ஆறு இடங்களைக் குடியரசு கட்சி கூடுதலாக வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..2 கோடிக்கு கிராமம் விற்பனை.! நல்ல ஆஃபர் யார் வேணாலும் வாங்கலாம் !! இவ்வளவு வசதிகள் இருக்கா ?