லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றி சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியது. இதில் பயணம் செய்த 100 பேர் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
லிபியா நாட்டில் இருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு மத்திய தரைக்கடலில், இத்தாலி நோக்கி அகதிகள் படகு சென்று கொண்டிருந்த்து. லிபியா மற்றும் இத்தாலிக்கு இடையே 50 கி.மீ. தூரத்தில் சென்று கொண்டிருந்த அந்த படகு எதிர்பாராத விதமாக திடீரென கடலில் மூழ்கியது.
இந்த விபத்து பற்றி அறிந்ததும் பிரான்ஸ் கடற்படை கப்பலும், இரண்டு வர்த்தக கப்பல்கள் மற்றும் விமானங்களும் கடலுக்கு சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டன. ஆனால், கடலில் விழுந்து தண்ணீரில் தத்தளித்த 4 பேரை மட்டுமே உயிருடன் மீட்டனர். 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
விபத்து ஏற்பட்ட படகில் நூற்றுக்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். இதனால், அதிக பாரம் தாங்காமலும், கரையை சென்றடையும்போது, ஏற்பட்ட ஆர்ப்பறிக்கும் அலையாலும் படகு மூழ்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மீட்க்கப்பட்டவர்கள் தவிர, 100க்கு மேற்பட்டோர் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், அந்த படகுகளில் பயணம் செய்தவர்கள், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை.
