பாகிஸ்தானில் அசத்தும் தமிழர்கள்... மாரியம்மன் கோயில் கட்டி பக்தி மார்க்கம்..!
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு பகுதியில் கணிசமாக தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் முஸ்லீம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என 3 பிரிவினரும் வாழ்ந்து வருகிறார்கள்.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு பகுதியில் கணிசமாக தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் முஸ்லீம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என 3 பிரிவினரும் வாழ்ந்து வருகிறார்கள்.
1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டில் இருந்தும், இலங்கையில் இருந்தும் கராச்சிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். பாகிஸ்தானில் இந்தியாவில் இருந்து வந்த தமிழர்கள், உருது முஸ்லீம்கள் அனைவரையும் முஹாஜீர்கள் என அழைக்கின்றனர். புலம் பெயர்ந்தவர்கள் என்பது இதற்கு பொருள்.இலங்கை உள்நாட்டுப் போரின்போது, ஏராளமான ஈழத் தமிழர்களும், கராச்சிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள்.
கராச்சியில் உள்ள ஜின்னா முதுகலை மருத்துவக் கல்லூரிக்கு அருகே மெட்ராஸ் பாரா என்ற பகுதி உள்ளது. இங்கு சுமார் 1000 தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்கள் பிரட்டிஷ் ஆட்சியின் போது, கராச்சியில் குடியேறியவர்கள். இவர்கள் வழிபடுவதற்காக மாரியம்மன் கோவில் ஒன்றும் உள்ளது. இந்த கோவில் தான் பாகிஸ்தான் உள்ள மிகப்பெரிய தமிழ் கடவுள் கோவில். இதே போல் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் தமிழர்களும் பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர்.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டில் இருந்து 30 கடிதங்கள் கராச்சிக்கு வருகின்றன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் ஆசிரியர் இமானுவேல் நிக்கோலஸ் தமிழ் வம்சாவளி கிறிஸ்தவர். இதேபோல் குவெட்டா பகுதியிலுள்ள பிரபல பாதிரியாரான விக்டர் ஞானபிரகாசமும் ஈழத் தமிழரே.
நோபல் பரிசு பெற்ற தமிழரான சுப்ரமணியம் சந்திரசேகர் பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியான மணிசங்கர் அய்யர், பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தவர். இப்படி உலகின் பிற நாடுகளைப் போல், பாகிஸ்தானிலும், தமிழர்கள் அசத்தி வருகின்றனர்.