பங்களாதேஷ் தேர்தல்.. ஷேக் ஹசீனா 5வது முறையாக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
Bangladesh PM Sheikh Hasina : பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் "50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை வென்றுள்ளது" என்று தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தகவல் அளித்துள்ளார். அங்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் வறுமையால் சூழப்பட்டிருந்த ஒரு நாட்டில் கடுமையான பொருளாதார வளர்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது அரசாங்கம் பரவலான மனித உரிமை மீறல்கள் மற்றும் இரக்கமற்ற எதிர்க்கட்சி ஒடுக்குமுறை போன்ற விஷயங்களால் நிரணித்துள்ளது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
ஸ்பேஸ்எக்ஸ் நிகழ்ச்சிக்கு முழு போதையில் வந்து அசிங்கமாகப் பேசிய எலான் மஸ்க்!
அவரது கட்சி போட்டியிட்ட இடங்களில் பல இடங்களில் திறமையான போட்டியாளர்களை எதிர்கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP), இந்த தேர்தல் ஒரு போலி தேர்தல் என்று முன்பு குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. 76 வயதான ஹசீனா, குடிமக்கள் ஜனநாயக செயல்பாட்டில் நம்பிக்கை காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற எதிர்ப்புப் பிரச்சாரத்தின் போது பிஎன்பி (BNP), தீவைப்பு மற்றும் நாசவேலையில் ஈடுபட்டதாக ஹசீனா குற்றம் சாட்டினார், பின் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகள் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக சொல்லப்பட்டாலும், அந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் நிராகரிக்கிறது வருகின்றனர்.
கடந்த 2022ல் உணவுச் செலவுகள் மற்றும் பல மாதங்களாக நீடித்த இருட்டடிப்புகளுக்குப் பிறகு, பொருளாதாரத் தலையீடுகள் ஹசீனாவின் அரசாங்கத்தின் மீது பலரை அதிருப்தி அடையச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியை கேலி செய்த அமைச்சர்களை சஸ்பெண்ட் செய்த மாலத்தீவு அரசு