Christmas: கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை ..! ஒமிக்ரான் அதிக பரவலால் இங்கிலாந்தில் அதிரடி.!

தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்ட றியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென்ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்து, நெதர்லாந்து, போர்சுக்கல், இத்தாலி, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர், நைஜிரீயா, பிரான்ஸ் உள்ளிட்ட 89 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Ban on Christmas and New Year celebration... British government action

ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல்  மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அந்நாட்டு அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. 

தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்ட றியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  தென்ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்து, நெதர்லாந்து, போர்சுக்கல், இத்தாலி, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர், நைஜிரீயா, பிரான்ஸ் உள்ளிட்ட 89 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒமிக்ரான் டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Ban on Christmas and New Year celebration... British government action

இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில் நீடித்து வருகிறது. இங்கிலாந்தில் கடந்த 15-ம் தேதி 78,610 பேருக்கும், 16-ம் தேதி 88,376 பேருக்கும், 17-ம் தேதி 93,045 பேருக்கும், 18-ம் தேதி 90,418 பேருக்கும், 19ம் தேதி 90,106 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, அடுத்த மாதம் மிகப் பெரிய பாதிப்புகள் வரக்கூடும் என்பதால், மருத்துவமனைகளை தயார் நிலையில் இருக்கும்படி லண்டன் மேயர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Ban on Christmas and New Year celebration... British government action

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் ஒமிக்ரான் தனது கோரமுகத்தை காட்ட தொடங்கி விட்டதால் அங்கும் பொது முடக்கத்தை அமல்படுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது. இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வர இருக்கின்றன. இந்த விழாக்களின் போது ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடுவார்கள்.

Ban on Christmas and New Year celebration... British government action

இதன் மூலம் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்கப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதனால் இந்த கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இங்கிலாந்தில் பொது ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios