Asianet News TamilAsianet News Tamil

h3n8 bird flu : முதலில் கொரோனா இப்போ! சீனாவில் முதல்முறையாக H3N8 பறவைக் காய்ச்சல் 4வயது குழந்தைக்குப் பரவியது

avian influenza h3n8 bird flu  சீனாவில் முதல்முறையாக ஹெச்3என்8 வகை பறவைக் காய்ச்சல் மனிதருக்குப் பரவியது கண்டறியப்பட்டுள்ளது.இதுவரை இந்த வைரஸ் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியதே இல்லை. இப்போது திடீரென பரவியிருப்பதால் மருத்துவ அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்

avian influenza h3n8 bird flu :  China reports first case of H3N8 bird flu as 4-yr-old from Henan infected
Author
Henan, First Published Apr 27, 2022, 11:40 AM IST

சீனாவில் முதல்முறையாக ஹெச்3என்8 வகை பறவைக் காய்ச்சல் மனிதருக்குப் பரவியது கண்டறியப்பட்டுள்ளது.இதுவரை இந்த வைரஸ் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியதே இல்லை. இப்போது திடீரென பரவியிருப்பதால் மருத்துவ அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர் ஆனாலும், ஹெச்3என்8 வகை வைரஸ் வேகமாகப் பரவும்வாய்ப்புக் குறைவு என்று சீன மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்

முதன் முதலில் 
ஹெச்3என்8 வகை வைரஸ் கடந்த 2002ம் ஆண்டு, வடஅமெரிக்காவில் நீரில்வாழும் பறவைகளில் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த வகை வைரஸ்கள் நாய்கள், குதிரை, கடல்உயிரினங்களையும் பாதிக்கும் தன்மை கொண்டது. ஆனால் இதுவரை மனிதர்களுக்கு பரவியதாக எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை, பரவியதும் இல்லை.

avian influenza h3n8 bird flu :  China reports first case of H3N8 bird flu as 4-yr-old from Henan infected

4வயது குழந்தை

ஆனால், முதல்முறையாக ஹீனன் மாகாணத்தில் 4வயது குழந்தைக்கு இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், “ ஹீனன் மாநிலத்தில் 4வயது சிறுவனுக்கு தொடர் காய்ச்சல், பல்வேறு அறிகுறிகள் இருந்ததையடுத்து அவனுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு. இதில் அந்த சிறுவனுக்கு ஹெச்3என்8 வகை பறவைக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது

இந்தச் சிறுவனின் வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார்கள். அவர்கள் வாழும் வீட்டைச் சுற்றி அதிகமான வாத்துகள் வசிக்கும் பகுதியாகும். இந்த சிறுவன் பறவைகளிடம் அதிகமாகப் பழகியதால் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் எனத் தெரிகிறது. இ்ந்த வகை வைரஸ் ஒருமனிதரிலிருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை.

avian influenza h3n8 bird flu :  China reports first case of H3N8 bird flu as 4-yr-old from Henan infected

பாதிப்பு இல்லை

இந்த சிறுவன் நெருங்கிப் பழகியவர்களிடம் நடத்திய பரிசோதனையிலும் பெரிதாக மாற்றமில்லை. இருப்பினும் இந்த சிறுவன் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுளளன. மிகப்பெரிய அளவில் ஹெச்3என்8 வகை வைரஸ் பரவும் என்பதற்கு வாய்ப்புக் குறைவு.

மக்கள் பறவைகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும், இறந்த பறவைகள், நோயுள்ள பறவைகளைவிட்டு ஒதுங்கி இருக்க வேண்டும். நோயால் இறந்த பறவைகளின் இறைச்சியை உண்ணக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எச்சரிக்கை

ஏதேனும் உடல்நலக்குறைவு இருந்தால், காய்ச்சல் வந்தாலோ, அல்லது மூச்சிறைப்பு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இந்த வகை வைரஸ் பெரும்பாலும் பறவைகளுக்குதான் பரவும் மனிதர்களுக்குபரவும் வாய்ப்புக் குறைவு” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

avian influenza h3n8 bird flu :  China reports first case of H3N8 bird flu as 4-yr-old from Henan infected

ஹெச்6என்71 வகை வைரஸ் 1997ம் ஆண்டிலும் மற்றும் ஹெச்7என்9 வகை வைரஸ் 2013ம் ஆண்டிலும் கண்டறியப்பட்டது. இந்த பறவைக் காய்ச்சலால் ஏராளமான மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios