ஆஸ்திரேலியாவில் விமானம் விழுந்து விபத்து : 5 போ் பலி!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 5 போ் உயிாிழந்தனர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்பர்ன் நகரில் ஃபேக்டரி அவுட்லெட் வளாகத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மெல்பர்னிலிருந்து கிங் ஐலண்டுக்கு சென்று கொண்டிருந்த சிறிய ரக விமானம் தொழில்நுட்பக் கோளாறால் வணிக வளாகத்தின் மீது விழுந்து நொறுங்கியது.

இதில் பயணம் செய்தோர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.