Asianet News TamilAsianet News Tamil

நாட்டையே வறட்சியாக்கிய 10 ஆயிரம் ஒட்டகங்கள்...!! சுட்டுக்கொல்ல முடிவு செய்த கொடூர நாடு...!!

ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது .  சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Australia plan to  kill 10 thousand camel in for water scarcity
Author
Australia, First Published Jan 8, 2020, 1:19 PM IST

ஆஸ்திரேலியாவில் உள்ள 10,000 ஓட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது .  அதற்கான பணிகள்  தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது.  அதிக அளவில் தண்ணீரை குடித்து மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் ,  அதைக்  கொள்ள அந்நாட்டி அரசு  திட்டமிடப்பட்டுள்ளது .  தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் ஃபெரல்  வகை ஒட்டகங்கள் மிக அதிக அளவில் தண்ணீர் குடித்து மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அந்நாட்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

 Australia plan to  kill 10 thousand camel in for water scarcity

கடுமையான வறட்சி காலங்களில் மனிதர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்து இந்த ஒட்டகங்கள் தண்ணீரை அதிகம் பருகிவதால் ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல  அப்பகுதி மக்கள்  அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.  சமீபத்தில் ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் விக்டோரியா மாகாணங்களில் கடந்த மூன்று மாதங்களாக எரிந்துவந்த  காட்டுத்தீ தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக  தீ கட்டுக்குள் வந்துள்ளது.  காட்டுத்தீயில்  லட்சக்கணக்கான வனவிலங்குகளும் கோடிக்கணக்கான  மரங்களும் கருகி சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ,  ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது .  சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Australia plan to  kill 10 thousand camel in for water scarcity

ஆனாலும் தண்ணீர் பாதுகாப்பு நடவடிக்கையாக 10,000 பெறல் ஒட்டகங்களை சுட்டுக்கொள்ள உள்ளனர் இதற்காக சுடுவதில் கைதேர்ந்த நபர்களை கொண்டு ஒட்டகங்களை சுட்டு கொள்ளவுள்ளனர் ஹெலிகாப்டரில் பறந்தபடியே சுட்டுக்கொல்ல திட்டமிடப்பட்டுள்ளது ஒட்டகங்கள் வெளியிடும் கழிவுகள்  அதிக மீத்தேன்  வாயுக்களை உருவாக்குவதால் அது புவி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது . 

Follow Us:
Download App:
  • android
  • ios