கனடாவின் க்யுபிக் நகரத்தில் அமைந்துள்ள ஒரு மசூதியில் நடந்த பயங்கர தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை நேர தொழுகை நடந்து கொண்டிருந்தபோது துப்பாக்கியுடன் அங்கு வந்த மர்ம நபர்கள் சரமாரியாக சுட தொடங்கினர்.
மசூதியின் உள்ளே சுமார் 40 பேர் இருந்ததாகவும் இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல் நடத்தியவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பிசென்ற மற்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்லாமிய நாடுகளிலிருந்து அகதிகளாக அமெரிக்காவில் தஞ்சமடைந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தடை விதித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
