விண்வெளியில் தங்கி ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க விண்வெளி வீரர் அங்கிருந்தே தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
உலகமே மிகவும் எதிபார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் ஓட்டு போட பதிவு செய்து ஓட்டு பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாசாவால் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி பணியாற்றும் ஷானே கிம்ப்ராஹ் அங்கிருந்தே தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.
மற்றொரு விண்வெளி வீரர் ரூபின்ஸ் கடந்த வாரம் பூமிக்கு திரும்பி வந்து தனது வாக்கினை செலுத்தியுள்ளார் என்று நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி வீரர்கள் தொழில்நுட்ப உதவியோடு வாக்களிக்க வகை செய்யும் சட்டம் கடந்த 1997ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
