இந்தியாவில் காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனாவை தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள்  சூறாவளி வேகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஏப்ரல் 14ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். 

கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கும் படி மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அரசின் வேண்டுகோளை ஏற்று ஏராளமான தொழிலதிபர்கள், வங்கிகள், திரைத்துறை பிரபலங்கள் ஆகியோர் கோடிகளில் வாரி வழங்கி வருகின்றனர். 

இதையும் படிங்க: ராதிகா - சரத்குமார் பேத்திக்கு பெயர் வச்சாச்சு... என்ன பெயர் தெரியுமா?

இந்நிலையில் இந்தியாவிற்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஆசிய வளர்ச்சி வங்கு சுமார் 2.2 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது. இந்த தகவலை கூறியுள்ள  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவிற்கு உதவி செய்வதாக ஆசிய வளர்ச்சி வங்கி உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: மீண்டும் சட்டை பட்டனை கழட்டி போஸ்... கொரோனா ரணகளத்திலும் கிளு,கிளுப்பு காட்டும் ரம்யா பாண்டியன்...!

ஏழைகள் தொற்று நோயின் பொருளாதார சிக்கலுக்கு உள்ளாவதை தவிர்க்கவும், முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு உதவும் விதமாகவும் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்தியாவிற்கான உதவித்தொகை அதிகரிக்கப்படும் என்றும், கொள்கை அடிப்படையிலான கடன் உதவி, நிதியை விரைவாக வழங்க நடவடிக்கை ஆகியவையும் மேற்கொள்ளப்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா தெரிவித்துள்ளார்.