ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உடல்சிதறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள நாவா மாவட்டத்தில் விமானப்படை வீரர்கள் நேற்று இரவு ஹெலிகாப்டர்களில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 15 வீரர்கள் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.