பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் உலாவருவது சீனத்துருப்புகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக சீன கடற்படை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தென்சீனக் கடற்பகுதியில் சீனா, தனது அண்டை நாடுகளுடன் பகை வளர்த்துள்ள நிலையில், அமெரிக்கப் போர்க் கப்பல்களின் வருகை சீனாவை நடுநடுங்க வைத்துள்ளது. உலகமே கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த வைரஸை  பரப்பிய சீனா இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி நாடு பிடிக்கும் ஆசையில் அண்டை நாடுகளுடன் அராஜகம் செய்துவருகிறது. ஏற்கனவே தைவான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், அங்கு சீனாவுக்கு எதிரான பகைநெருப்பு எரிமலையாய் வெடித்துள்ளது. அதுமட்டுமின்றி தனது அண்டை நாடுகளான ஜப்பான், தைவான், மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் போன்ற  நாடுகளுக்கு எதிராக தென்சீன கடல் பகுதியில் உள்ள முக்கிய தீவுகளை ஆக்கிரமித்து சீனாஆதிக்கம் செலுத்திவருகிறது. 

இதனால் அந்நாடுகள் சீனாவுக்கு எதிராக கனன்று கொண்டிருக்கின்றன, இந்நிலையில் அமெரிக்கா தென்சீன கடற்பகுதியில் சீனாவின்  அராஜகத்தை தட்டிக் கேட்கும் வகையில் ராணுவ ரீதியாக தலையிட்டு வருகிறது, இது சீனாவுக்கு மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கொரோனா விவகாரத்தில் ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் சீனாவிற்கு எதிராக  திரும்பியிருப்பது, ராணுவத்தில் நாட்டாமை தான்தான் என ஆட்டம் போடும்  சீனாவை நிலைகுலையச் செய்துள்ளது.  எதைத் தின்றால் பித்தம் தெளியும் என  பித்துப் பிடித்து திரியும் சீனா, அடிக்கடி இந்திய எல்லையில் அத்துமீறி வருகிறது. இந்நிலையில் கடந்த திங்களன்று நடந்த வன்முறை மோதலில்  20 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதை வைத்து எப்படியாவது இந்தியாவை மிரட்டி இடம் பிடிக்கலாம் என சீனா எத்தனித்து வருகிறது, ஆனால் ஒரு அங்குளம் கூட விட்டுக்கொடுக் முடியாது என இந்தியா உறுதியுடன் நிற்கிறது. 

இதற்கிடையில் கடற்படை ஜாம்பவானான அமெரிக்கா, தியோடர் ரூஸ்வெல்ட், ரொனால்ட் ரீகன் மற்றும் நிமிட்ஸ் என்ற தன் போர்க்கப்பல்களை பசிபிக் பெருங்கடலில் நிலை நிறுத்தியுள்ளது.  தானே  கடற்படைகளின் கொம்பன் என கொக்கரித்து வந்த  ஜி ஜின்பிங் குக்கு அமெரிக்க வல்லரசின் இந்த அதிரடி நடவடிக்கை ஆட்டம் காணவைத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள சீனாவின் அதிகாரப்பூர்வ  செய்தித்தாள் குளோபல் டைம்ஸ், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தென்சீனக் கடலில் உள்ள சீன துருப்புகளை அச்சுறுத்தும் செயல் என கூறியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள சீன கடற்படை நிபுணர் லி ஜி, பசிபிக் கடலில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தி இருப்பது பசிபிக் உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகிலும் மிக சக்திவாய்ந்த கடற்படை தன்னுடையதுதான் என்பதை அமெரிக்கா காட்ட விரும்புகிறது. அவை எப்போது வேண்டுமானாலும் தென்சீனக் கடற்பகுதிக்குள் நுழையக்கூடிய அளவிற்கு மிக நெருக்கமாக உள்ளது எனவும், பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் இருப்பது  ஸ்ப்பிராட்லி மற்றும்  பாராஷெல் தீவுகளில் நிறுத்தப்பட்டுள்ள சீனா துருப்புகளை அச்சுறுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த தீவுகள் வழியாக செல்லும் மற்ற கப்பல்களுக்கும் இது ஆபத்தை ஏற்படுத்தலாம், ஆனாலும் இப்பிராந்தியத்தில் சீனா தனது நலன்களில் இருந்து பின்வாங்காது  எனவும் அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர்  ரியன் மோம்சன், அமெரிக்க கடற்படை ஒவ்வொருநாளும் பசிபிக் பகுதியில் தீவிரமாக உள்ளது, இந்த பகுதியில் உள்ள அமெரிக்காவின் சகாக்களுக்கும், கூட்டாளிகளுக்கும் உதவ இவைகள் கொண்டுவரப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும் கடந்த 75 ஆண்டுகளாக அமெரிக்க கப்பல்கள் தென்சீனக்கடல், கிழக்கு சீனக்கடல் மற்றும் பிலிப்பைன்ஸ் கடலைச் சுற்றி தொடர்ந்து ரோந்து வந்து கொண்டிருக்கின்றன.  பசிபிக் பகுதியின்  பாதுகாப்பை அதிகரிப்பதற்கும், இங்கு அமைதியை பேணுவதற்கும்  எங்களிடம் உள்ள பல வழிகளில் இதுவும் ஒன்று எனக் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் இந்த 3 போர்க் கப்பல்களின் எடை ஒரு லட்சம் டன், இது ஒவ்வொன்றிலும் 60 போர் விமானங்களில் நிறுத்தப்பட்டுள்ளன, வடகொரியா உடனான தகராறுக்கடுத்து 2017  ஆம் ஆண்டு முதல் தடவையாக அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை இப்பகுதிகளுக்கு அனுப்பியது குறிப்பிடதக்கது.இந்தியாவுடன் சீனா வாலாட்டி வரும் நிலையில் அமெரிக்க போர் கப்பல்கள் பசுபிக் பெருங்கடல் வந்திருப்பது சீனாவுக்கான எச்சரிக்கை என கருதப்படுகிறது.