சமீபத்தில் பிரேசில் நாட்டில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீ விபத்து உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது, கோடிக்கணக்கான மரங்கள் தாவரங்கள் எரிந்து சாம்பலானதுடன். பல அறியவகை  உயிரினங்கள் தீயில் கருகி மாண்டன, உலகத்தின் நுரையீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என அந்த  தீவிபத்து குறிப்பிடப்பட்டது  அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள்.  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மலையடிவாரத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாரே சமூக வீரோதிகள் பற்ற வைத்த அந்த தீ. தற்போது அங்கு நிலவிவரும்  வறண்ட வானிலை காரணமாக வேகமாக பரவிவருகிறது, இதுவரை லட்சக் கணக்கான மரங்கள் தீக்கு இரையாகிஉள்ளன.  தீ கொழுந்து விட்டு எரிவதன் காரணமாக மலையடிவாரத்தையொட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவி வருவதால் அக்குடியிருப்புகளில் இருந்து மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.  இதுவரையில் அந்தத் தீ விபத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் ஒரு  லட்சத்திற்கும் அதிகமானோர், வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மிக தீவிரமாக கொழுந்துவிட்டு எரிகிற தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

 

இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ், மற்றும் ரிவர்சைட் நகரங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  தீ தொடர்ந்து பரவும்  பட்சத்தில் புகை மூட்டத்தால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் சுவாசக்கோளாறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  எனவே, அப்பகுதியில் உள்ள மக்களை வலுக் கட்டாயமாக   மீட்பு படையினர் வெளியேற்றி வருகின்றனர்.  உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கவும்,  காட்டுத்தீயை விரைந்து கட்டுப்படுத்தவும் அமெரிக்க ராணுவம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.