தீபாவளி வந்தாச்சு.. அமெரிக்காவில் ஒலித்த ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே பாடல் - அசத்திய பாடகி மேரி மில்பென்! வீடியோ வைரல்

Deepavali Celebrations : தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் பல்வேறு தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க நாட்டை சேர்ந்த பாடகி ஒருவர், ஒளியின் திருநாளை கொண்டாடும் வகையில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். 

American Singer Mary Millben sung Jai Jagdish Hare song for deepavali video viral in internet ans

அமெரிக்க பாடகி மேரி மில்பென், தீபாவளி திருநாளுக்காக "ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே" பாடலை பாடியுள்ளார். மேலும் நான் தீபாவளியை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் தனது பதிவில் அவர் கூறியுள்ளார்.  அமெரிக்க நாட்டை சேர்ந்த பாடகி மேரி மில்பென் தீபாவளியை முன்னிட்டு ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே பாடலை படித்ததோடு, அவர் பாடல் பாடும் வீடியோவை சமூக ஊடக தளமான X இல் பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் மேரி மில்பென் பதிவிட்டதாவது, "இந்த வருடத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான நேரமான தீபாவளி வந்துவிட்டது. இந்தியாவே, இந்த வார இறுதியில் உங்களுடன் அதிகாரப்பூர்வமாக தீபாவளி திருநாளை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள இந்திய சமூகத்தினருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள். உங்கள் உள்ள ஒளியால் உலகத்தை ஒளிரச் செய்யுங்கள்" என்று கூறியுள்ளார் அவர்.

 

மேரி ஜோரி மில்பென் ஒரு அமெரிக்க பாடகியாவார், கடந்த 1982ம் ஆண்டு அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரில் பிறந்த இவர் மிகசிறந்த வயலின் இசைக்கலைஞருமாவார். கடந்த ஆகஸ்ட் 2020ல், மில்பென் இந்தியாவின் 74வது சுதந்திர தினத்திற்காக இந்தியாவின் தேசிய கீதமான "ஜன கண மன" பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Grammy Award : உயரிய கிராமி விருதுகள் - நாமினேட் செய்யப்பட்ட பிரதமர் மோடியின் 'அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்' பாடல்!

அதே போல கடந்த ஜூன் மாதம் 2023ல், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது அவருக்காக மில்பென், அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் கட்டிடத்தில் இந்தியாவின் தேசிய கீதத்தை பாடினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios