Asianet News TamilAsianet News Tamil

சீனாவின் பொருளாதாரத்தை சிதைக்க திட்டம் போட்ட அமெரிக்கா..!! வெளிப்படையாக எச்சரித்த ட்ரம்ப்..!!


கொரோனா வைரஸ் பாதிப்புகளை மேற்கோள்காட்டி அமெரிக்கா - சீனா இடையேயான ஒப்பந்தத்தை மீற முயன்றாலோ அல்லது மதிக்கவில்லை என்றாலோ இருநாட்டுக்கும் இடையேயான  ஒட்டுமொத்த  வர்த்தக ஒப்பந்தத்தையும் ரத்து செய்து விடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவை எச்சரித்துள்ளார் .

american president warning china regarding  trade
Author
Delhi, First Published Apr 23, 2020, 2:35 PM IST

கொரோனா வைரஸ் பாதிப்புகளை மேற்கோள்காட்டி அமெரிக்கா - சீனா இடையேயான ஒப்பந்தத்தை மீற முயன்றாலோ அல்லது மதிக்கவில்லை என்றாலோ இருநாட்டுக்கும் இடையேயான  ஒட்டுமொத்த  வர்த்தக ஒப்பந்தத்தையும் ரத்து செய்து விடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவை எச்சரித்துள்ளார் .  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில்  அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன .  இந்நிலையில் பொருளாதாரத்தை காரணம் காட்டி சீனா ஒப்பந்தத்தை மீற முயற்சி செய்தால் அமெரிக்கா இந்த நடவடிக்கையில் இற்கும் என  ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.  ஏற்கனவே சீனா மீது அமெரிக்கா அதிரடியாக பல குற்றச்சாட்டுகளை வைத்துவரும் நிலையில்  தற்போதைய இந்த எச்சரிக்கை சீனாவை மேலும் சீண்டி பார்ப்பதாக அமைந்துள்ளது. 

american president warning china regarding  trade

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது,  இதுவரையில் 25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது .  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது.  உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்க மக்கள் இந்ந வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அமெரிக்காவில் 8 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அங்கு  50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது .  இதனால் அமெரிக்காவின் பொருளாதாரமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சீனாவின் பொருளாதாரவும் மிகக் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளன.   இந்நிலையில், கொரோனா  பாதிப்புகளை சுட்டிகாட்டி, புதிய வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற கோரிக்கையை ஒப்பந்தத்தில் சேர்த்துவிடலாம் என சீனா நினைக்கிறது.  இதற்கு அமெரிக்கா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.  american president warning china regarding  trade 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அதிபர்  ட்ரம்ப், கொரோனா வைரஸை காரணம் காட்டி புதிய வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற கோரிக்கையை ஒப்பந்தத்தில இணைக்க சீனா முயற்சிக்கிறது,  ஒப்பந்தத்தை மீறவோ , அல்லது மதிக்காமல் போனாலோ  இரு நாட்டுக்கும் இடையேயான ஒட்டுமொத்த  வர்த்தக ஒப்பந்த த்தையும்  ரத்து செய்துவிடுவேன் என அவர்  மிரட்டியுள்ளார்,   மேலும் தன்னை விட சீனாவை இத்தனை கடுமையாக கண்டித்தவர் எவரும் இல்லை என்றும் ட்ரம்ப்  கூறியுள்ளார்... அதாவது அமெரிக்கா-சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகப் போர் நிலவி வருகிறது .  

american president warning china regarding  trade

இந்நிலையில் இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இறக்குமதி வரிகளை மாறி மாறி அதிகரித்து வருகின்றன .  இதனால் ஒட்டுமொத்த உலக பொருளாதாரமும்  சீர் குலைந்துவருகின்றன.   இந்நிலையில் கடந்த ஜனவரியில் இருநாடுகளும் செய்து கொண்ட முதற்கட்ட ஒப்பந்தத்தின் படி சீனா 200 பில்லியன் டாலர் அளவிற்கு  அமெரிக்க பொருட்களை வாங்கவேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  ஆனால் தற்போதுள்ள நெருக்கடியில் அதை பின்பற்ற முடியாது என சீனா கூறி விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா அதிபர் இவ்வாறு சீனாவை எச்சரித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios