ட்ரம்பை அம்பலப்படுத்திய கிம்ஜாங் உன் சகோதரி...!! ரகசியமா எழுதிய கடிதம் வெளிச்சத்திற்கு வந்தது ..!!

 ட்ரம்ப் எழுதியிருந்த கடிதத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக வடகொரியாவுடன் இணைந்து  செயல்பட வேண்டும் என தன் விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார் என அவர் கூறினார்

american president trump  willing to help north Korea regarding corona

சீனா வைரஸ் ஒழிப்பதில் வட கொரியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.  வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செய்தியாளரை சந்தித்து அவர் அமெரிக்கா ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா உதவி வருகிறது எனவே மற்ற நாடுகளுக்கும் உதவ தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசி அவர் இது மிகவும் கடினமான நேரம் இதை எதிர்கொள்ள ஈரானுக்கு அமெரிக்கா உதவி வழங்கியுள்ளது எனக் கூறினார்.  இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியும் மற்றும் தொழிலாளர் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான கிம் யோ ஜாங் , அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிங் ஜான் உன்னுக்கு எழுதிய கடிதத்தம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். 

american president trump  willing to help north Korea regarding corona

வடகொரியா தயாரித்துள்ள புதிய ஏவுகணை சோதனையை பார்வையிட்ட பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்,  அதாவது அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ட்ரம்ப் அனுப்பியுள்ள கடிதம் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் உள்ள உறவுக்கு நல்ல அடையாளம் என்றார் . அத்துடன் எங்கள் தலைவருடன் அமெரிக்க அதிபர் கொண்டிருந்த நல்ல உறவை தொடர்வது இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நட்பின் அடையாளம் என்றார் .   அமெரிக்க அதிபர் டிரம்ப் வட கொரிய அதிபருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருப்பது இரு நாடுகளுக்கும் இடையே உள்ளபல்வேறு சவால்கள் சிரமங்களை தாண்டி  நல்ல உறவை வளர்ப்பதற்கான வழி என்றார்.  ட்ரம்ப் எழுதியிருந்த கடிதத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக வடகொரியாவுடன் இணைந்து  செயல்பட வேண்டும் என தன் விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார் என அவர் கூறினார். 

american president trump  willing to help north Korea regarding corona

அதேபோல் எதிர்காலத்தில் வடகொரிய அதிபருடன் டிரம்ப் தொடர்பில் இருப்பதற்கு விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் ட்ரம்பின் தனிப்பட்ட கடிதத்தை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டிய தாகவும் அவரது சகோதரி தெரிவித்தார் .  ஆனால் வட கொரியாவில் இதுவரையில் எந்த வைரஸ் தொற்றும் இல்லை என தெரிவித்த அவர் ,  தொற்று நோயை தடுக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஒரு மீட்டர் தூர இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதுடன் பொது போக்குவரத்தை தவிர்க்கும் படியும் மக்களை வலியுறுத்தி உள்ளதாக அவர் கூறினார் . 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios