சீனாவை நம்பி மோசம்போன உலக சுகாதார நிறுவனம்...!! WHO இயக்குனரை ஏறி அடித்த ட்ரம்ப்..!!
அமெரிக்கா தனது ஒட்டுமொத்த கோபத்தையும் சீனா மீது வெளிப்படுத்தி வரும் நிலையில் , உலக சுகாதார அமைப்பும் அதன் கோபத்திற்கு ஆளாகியுள்ளது .
உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிதியை நிரந்தரமாக நிறுத்த நேரிடும் என , அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார் . இது குறித்து அவர் உலகச் சுகாதார அமைப்புக்கு எழுதியுள்ள கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது . இதுவரையில் 49 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் வைரசால் உயிரிழந்துள்ளனர். எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸ் அமெரிக்காவை நிலைகுலையச் செய்துள்ளது . அமெரிக்கா தனது ஒட்டுமொத்த கோபத்தையும் சீனா மீது வெளிப்படுத்தி வரும் நிலையில் , உலக சுகாதார அமைப்பும் அதன் கோபத்திற்கு ஆளாகியுள்ளது .
கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் சீனாவில் பரவியபோது அதை உலக நாடுகளுக்கு எச்சரிக்க சீனா தவறிவிட்டது , அதுமட்டுமின்றி சீனாவின் ஆய்வுகூடத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த வைரஸ் என்றும் இதை சீனா திட்டமிட்டு பரப்பியது எனவும் , அதற்கு தங்களிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளதாகவும் அமெரிக்கா தொடர்ந்து சீனா மீது குற்றம்சாட்டி வருகிறது . இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரசை எதிர்கொள்வதில் சீனா சிறப்பாக செயல்பட்டது என பாராட்டியதுடன் சீனாவை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தது இது அமெரிக்காவுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது . இதனால் அமெரிக்காவின் கோபம் உலக சுகாதார நிறுவனத்தின் மீதும் திரும்பியது, WHO தன் கடமையை சரியாக செய்யவில்லை அது சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு வைரஸ் பரவல் குறித்து உலக நாடுகளை எச்சரிக்க தவறிவிட்டது உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் சீனாவின் மக்கள் தொடர்பு அதிகாரி போல செயல்படுகிறார் என குற்றம்சாட்டிய அமெரிக்கா உலகச் சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வந்த 400 மில்லியன் டாலரை நிறுத்துவதாக அறிவித்தார்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் 73 ஆவது உலக சுகாதார கூட்டம் நேற்று நடைபெற்றது அதில் சுமார் 123 க்கும் அதிகமான நாடுகள் , சீனா மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன .சீனாவுக்கு எதிராக உலக அளவில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் , அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார் அதில் அடுத்த 30 நாட்களுக்குள் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகளில் தகுந்த முன்னேற்றம் ஏற்படாவிட்டால் உலகச் சுகாதார நிறுவனத்திற்கு தற்போது அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிதியை நிரந்தரமாக நிறுத்த நேரிடும் என எச்சரித்துள்ளார், மேலும் தொற்று நோய் பரவலை எச்சரிப்பதில் நீங்களும் உங்கள் அமைப்பும் முறையாக செயல்படவில்லை , பல முறை உலகை தவறாக வழிநடத்தியதன் மூலம் உலகம் பேரழிவை சந்தித்து வருகிறது . சீனா நேர்மையுடன் நடந்து கொள்ளவதை உறுதி செய்வதன் மூலமே உலக சுகாதார நிறுவனம் தன்னை தக்கவைத்துக் கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார் .