அடுத்து இரண்டு வாரத்திற்குள் நடக்க உள்ள பயங்கரம்..!! அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி..!!
அமெரிக்காவில் சுமார் 2.2 மில்லியன் மக்கள் உயிரிழக்க நேரிடும் என பல நிறுவனங்கள் ஆய்வு வெளியிட்டு வருகின்றனர்.
வரவுள்ள அடுத்த இரண்டு வாரங்கள் அமெரிக்காவுக்கு மிக முக்கியமான காலகட்டம் என்றும் , அமெரிக்காவில் இன்னும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார் . எனவே தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவர் காலநீட்டிப்பு செய்துள்ளார் . அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது . சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . இந்நிலையில் உலக வல்லரசான அமெரிக்கா இதில் செய்வதறியாது திகைத்து வருகிறது . அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான பாதிப்பு உலக நாடுகளை மிகுந்த அதிர்ச்சியடைய வைத்துள்ளது . அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவம் என உச்சாணிக் கொம்பில் இருக்கும் அமெரிக்காவுக்கே இந்த நிலை என்றால் நமக்கெல்லாம் என்ன நிலையோ என பல நாடுகள் கலக்கமடைந்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் முகக்கவசம் வெண்டிலேட்டர்கள் , கிருமிநாசினிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது . மக்களுக்கு தேவையான வெண்டிலேட்டர்களை சப்ளை செய்வதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது . ஆனாலும் இன்னும் அது போதுமானதாக இல்லை என நியுயார்க் கலிபோர்னியா போன்ற நகரங்களிலிருந்து அபயக் குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன . இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு குழு செய்தியாளரை சந்தித்தது அப்போது அந்த குழுவில் தலைமை வகிக்கும் டாக்டர் அந்தோணி பாசி, மற்றும் டெபோரா பிரிக் மற்றும் உயர் மட்ட உறுப்பினர்கள் அதில் கலந்து கொண்டனர், அப்போது பேசிய ட்ரம்ப், அடுத்து வரவுள்ள இரண்டு வாரங்கள் அமெரிக்காவுக்கு மிக நெருக்கடியான காலகட்டமாக இருக்கப்போகிறது , அதேபோல் இந்த வைரஸால் அமெரிக்காவில் சுமார் 2.2 மில்லியன் மக்கள் உயிரிழக்க நேரிடும் என பல நிறுவனங்கள் ஆய்வு வெளியிட்டு வருகின்றனர்.
ஆகவே அமெரிக்க மக்கள் இதையெல்லாம் கருத்தில் கொண்டு முடிந்த அளவில் அடுத்த 30 நாடுகளுக்கு பாதுகாப்பை நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும், முறையாக கை கழுவுதல் , சமூக விலகல் போன்றவற்றை கடைபிடித்தால் மூலம் நோய் பரவல் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முடியும். இந்நிலையில் முடிந்த அளவிற்கு நோய்த்தொற்றை குறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது என்றார் . இந்த நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி இல்லை நம் நடத்தைகள் தான் இதற்கு ஒரே சிகிச்சை என்றார். அடுத்த முப்பது நாட்களில் நாம் எப்படி இருக்க போகிறோம் என்பதைப் பொறுத்து தான் இந்த நோயின் தாக்கத்தை நாம் முடிவு செய்ய முடியும் . ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் முகமூடி பயன்படுத்துவது குறித்தும் அதை சாத்தியப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் இன்னும் ஒருமாதம் நீடிக்க வாய்ப்புள்ளது என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.