கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில்,  சீனாவை முன்பைவிட அதிகமாக கேலி கிண்டல் செய்யும் நடவடிக்கையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறங்கியுள்ளார். எப்போதும் சமூக வலைதள நடவடிக்கைகளில் ஆக்டிவாக இருந்து வரும் அவர்,   தனது ட்விட்டர் பக்கத்தில் சீனா என பதிவிட்டு அதற்கான எதிர்வினைகளை கவனித்து வருகிறார்.  அவர் தனது டுவிட்டரில் சீனா என பதிவிட்ட ஒற்றை வார்த்தைக்கு ஏராளமானோர் சீனா குறித்து தங்களது அபிப்ராயங்களை பகிர்ந்து வருகின்றனர்.  அதில் பலர் சீனாவை மிக மோசமாக  விமர்சித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த வைரஸால் அமெரிக்காவே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.  சீனாவில் தோன்றிய இந்த வைரஸால் ஒட்டு மொத்த அமெரிக்காவும் நிலைகுலைந்து போயுள்ளது. 

அங்கு மட்டும் சுமார் 17 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.  ஒரு லட்சத்து 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  அந்த வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா எவ்வளவு  போராடியும் அதில் பலன் இல்லை.  இதனால் செய்வதறியாது திகைத்து வரும்  அமெரிக்காவின் ஒட்டுமொத்த கோபமும் சீனா மீது திரும்பியுள்ளது. அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவிற்கு சீனாதான் காரணம் என அமெரிக்கா  குற்றம்சாட்டி வருகிறது. இந்த வைரஸ்  சீனாவின் வுஹான் ஆய்வுக்  கூடத்தில் இருந்து கசிந்ததாகவும்., அது திட்டமிட்டு மனிதர்களால் உருவாக்கப்பட்டது எனவும்,  இந்த வைரசை சீனா திட்டமிட்டே பரப்பியதாகவும் அதிபர் டிரம்ப் சீனா மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டி வருகிறார்.  மேலும் சில மோசமான வார்த்தைகளால் சீனாவை விமர்சித்து வரும் அவர், தற்போது டுவிட்டர் பக்கத்தில் சீனாவை அவமானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 

 

எப்போதும்  ட்விட்டரில் மிக ஆக்டிவாக இருக்கும் அதிபர் டிரம்ப்,  நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் "சீனா" என ஒற்றை வார்த்தையை மட்டும் பதிவு செய்தார், அதனுடன் வேறு எந்த வார்த்தையும் அவர் பதியவில்லை, இதன் மூலம் பலர் சீனா குறித்து தங்களது அபிப்ராயத்தை டுவிட்டரில் வெளிபடுத்திவருகின்றனர். அவர் அவ்வாறு பதிவிட்ட ஒரு சில மணி நேரங்களில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் லைக்குகள்,  42,500 கமெண்ட்டுகள்,  5.6 ஆயிரம்  பதில் ட்வீட்டுகள் வந்திருந்தன.  ஏராளமானோர் "சீனா" என்ற வார்த்தைக்கு மிகக்கடுமையாக  பதில் அளித்திருந்தனர், பெரும்பாலானோர் பதில்கள் ஒற்றை வார்த்தையில் இருந்தது. அதில் பலர் Resign என்று பதிவிட்டிருந்தனர், சிலர் இனவாதி என்று குறிப்பிட்டிருந்தனர்.  கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் போலீஸ் காவலில் அடித்துக் கொள்ளப்பட்டதை குறிக்கும் வகையில்  ட்ரப்பை இவ்வாறு தாக்கியிருந்ததாக தெரிகிறது.  அமெரிக்க அதிபர் டிரம்ப் பின் இந்த டுவிட்டர் விளையாட்டால் சீனா மிகப் பெரும் கோபத்திற்கு ஆளாகி உள்ளது. அதே நேரத்தில் சீனாவை வார்த்தைகளால் துன்புறுத்துவதாக எண்ணி ட்ரம்ப் பதிவிட்ட டுவிட்டால் பவர் அவரையே கடுமையாக விமர்சித்து பதிவிட்டது, சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதையாகி உள்ளது.