அடிப்பட்ட பாம்பாக சீறும் அமெரிக்கா..!! சீனாவை பழி தீர்க்க வஞ்சம் வைத்து காத்திருக்கும் ட்ரம்ப்..!!


சீனாவுக்கு எதிராக  அமெரிக்கா மீகத் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் . ஜெர்மனி 130 மில்லியன் யூரோவை சீனாவிடம் இழப்பீடாக கேட்டுள்ள நிலையில் அமெரிக்கா அதைவிட அதிகமாக கேட்கும் என ட்ரம்ப் சீனாவை எச்சரித்துள்ளார்

american president trump press meet regarding china virus

சீனாவுக்கு எதிராக  அமெரிக்கா மீகத் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் . ஜெர்மனி 130 மில்லியன் யூரோவை சீனாவிடம் இழப்பீடாக கேட்டுள்ள நிலையில் அமெரிக்கா அதைவிட அதிகமாக கேட்கும் என ட்ரம்ப் சீனாவை எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இந்நிலையில் சுமார் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது . இதுவரை சுமார்  30 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரொனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது உலக அளவில்  இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் .  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் இந்த வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  அமெரிக்காவில் மட்டும் சுமார் 10 லட்சம் பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . 

american president trump press meet regarding china virus

அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது , கொரோனா வைரசுக்கு சீனாதான் காரணம்,  உலக அளவில் ஏற்பட்டுள்ள உயிரழப்பு மற்றும் பொருளாதார இழப்புகளுக்கு  சீனாதான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது .  இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப் ஜெர்மனி சீனாவிடம் 130 பில்லியன் யூரோவை இழப்பீடாக கேட்டுள்ளது ,  ஆனால் நாங்கள் அதை விட அதிகமாக எதிர்பார்க்கிறோம்,  ஜெர்மனி பண விஷயங்களை பார்க்கிறது ,  நாங்கள் அத்துடன் சேர்த்து மற்ற விஷயங்களையும் விசாரித்து வருகிறோம் ,  அமெரிக்காவையடுத்து ஐரோப்பாவையே இந்த வைரஸ் அதிகம் பாதித்துள்ளது ,  அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் சீனாவே இந்த வைரசுக்கு காரணமென உறுதியாக நம்புகின்றனர் . ஆரம்ப கட்டத்திலேயே இந்த வைரஸ் பரவல் பற்றிய தகவலை மற்ற நாடுகளுடன்  பகிர்ந்து கொண்டிருந்தால்  இவ்வளவு உயிரிழப்புகளும் மற்றும் உலகம் பொருளாதார அழிவையும் சந்தித்திருக்காது .

 american president trump press meet regarding china virus

ஜெர்மனியைத் தொடர்ந்து இப்போது இன்னும் பல நாடுகள் சீனாவிடமிருந்து இழப்பீடு பெறுவது தொடர்பாக பேச ஆரம்பித்துள்ளனர். என தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் ரோஸ் கார்டனில் நேற்று பத்திரிக்கையாளர்களை  சந்தித்த அதிபர் ட்ரம்பிடம்,  ஜெர்மனி போல சீனாவிடம் இழப்பீடு கேட்க திட்டம் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு அதைவிட மிக எளிதாக நாங்கள் ஏதாவது செய்ய முடியுமா என யோசிக்கிறோம் ,  நாங்கள் இன்னும் இறுதி தொகையை தீர்மானிக்கவில்லை ,  ஆனால் நாங்கள் முன்வைக்கப் போகும் தொகையின் அளவு மிக அதிகமாக இருக்கும் .  தற்போது ஏற்பட்டிருக்கும் இழப்பு உலகளாவிய பேரிழப்பு .உலகிலேயே அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருப்பது அதிக பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.  சீனாதான் வைரஸ் பரவலுக்கு காரணம் என்பதற்கு  ஆதாரங்கள் உள்ளன அதை நாங்கள் மிகத் தீவிரமாக விசாரித்து  வருகிறோம் என தெரிவித்துள்ளார்.  
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios