அதிபர் ட்ரம்புக்கு கொரோனா சோதனை...?? வெள்ளை மாளிகையில் அறிவித்த ட்ரம்ப்...!!

மாணவர்களுக்கான கல்விக் கடன்களின் வட்டி தொகை கொரோனா  காரணமாக தள்ளுபடி செய்யப்படுகிறது .  கூடுதல் இருப்புக்காக மிகப் பெரிய அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய உள்ளோம் . 

american president trump  press meet and announced corona test very soon

தற்போதுவரை எனக்கு எந்த அறிகுறியும் இல்லை ஆனாலும் விரைவில் கரொனோ வைரஸ் பரிசோதனை செய்ய உள்ளேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார் அமெரிக்காவில்  கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் .   சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சீனாவில் மிகப் பெரிய மனிதப் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் அங்கு சுமார்  3 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் ,  உலக அளவில் இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  5 ஆயிரத்தை தாண்டியுள்ளது .

 american president trump  press meet and announced corona test very soon

இதுவரையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு  இந்த வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்த வைரஸ் அமெரிக்காவிலும் மிக வேகமாக பரவி வருகிறது . இதுவரை இந்த வைரசுக்கு  41 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர் . இரண்டாயிரத்துக்கும்  அதிகமானோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ளது .  இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ,  அரசுக்கு உள்ள முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி அமெரிக்கா முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்து இருக்கிறேன் அடுத்த  எட்டு வாரங்கள் மிகவும் முக்கியமான தருணங்கள் ஆகும் . 

american president trump  press meet and announced corona test very soon

நாட்டில் கொரோனா பரிசோதனைக்கான அளவுகோலை அதிகப்படுத்தி உள்ளோம் . மாணவர்களுக்கான கல்விக் கடன்களின் வட்டி தொகை கொரோனா  காரணமாக தள்ளுபடி செய்யப்படுகிறது .  கூடுதல் இருப்புக்காக மிகப் பெரிய அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய உள்ளோம் .  இந்நிலையில் பிரேசில் அதிபர் தனக்கு கொரோனா ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார் .  தற்போது வரை எனக்கும் கொரோனா அறிகுறிகள் இல்லை ,  ஆனாலும் கூடிய விரைவில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளலாம் என நான் முடிவு செய்துள்ளேன் என அவர் கூறினார் . 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios