அமெரிக்க அதிபர் இந்தியாவில் பார்க்க வேண்டும் என விரும்பும் இடம் எது தெரியுமா..?? அங்கு தன் மனைவியுடன் இருக்க
இந்நிலையில் இந்திய சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக தனது பேஸ்புக்கில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் .
இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் , ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மாறி மாறி கருத்து கூறி வந்த நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் . அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார் . இந்நிலையில் அங்குள்ள இந்தியர்களின் வாக்குகளைக் கவரும் விதத்தில் அவர் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார் .
வருகிற 24 மற்றும் 27 தேதிகளில் அவர் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் டெல்லி மற்றும் அகமதாபாத்தில் ட்ரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது . அதற்காக அகமதாபாத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதில் மோடி உரையாற்ற உள்ளார் , இந்தியா வரவுள்ள ட்ரம்ப் அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆஸ்ரமத்திற்கு செல்கிறார் , அதனையடுத்து ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிடுகிறார் , அவர் தன் மனைவி மெலானியாவுடன் தாஜ்மகால் செல்கிறார் ஆனாலும் அதற்கான அதிகாரபூர்வ தகவலை வெள்ளை மாளிகை அறிவிக்கவில்லை. இந்தியப் பயணத்தின்போது அவர் தாஜ்மஹால் செல்வது உறுதியாகி உள்ளது
அதாவது வரும் 24ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு அகமதாபாத்திலிருந்து ஆக்ரா புறப்படுகிறார் , அங்கே தாஜ்மகாலை சுற்றிப் பார்த்த பிறகு அவர் அன்று மாலையே டெல்லி செல்கிறார் , அன்று இரவு பிரதமர் மோடியுடன் விருது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் . அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆக்ராவில் பார்வையிட செல்ல உள்ள நிலையில் அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆக்ராவில் முகாமிட்டுள்ளனர் , அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர் . முதலில் ஆக்ரா செல்லும் திட்டம் இல்லை , பிறகே தாஜ்மஹாலை பார்க்க செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்திய சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக தனது பேஸ்புக்கில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் .சீன அதிபர் ஜீ ஜின்பிங் சமீபத்தில் தமிழகம் வந்திருந்த நிலையில் இரண்டாவதாக அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் இந்தியா வரஉள்ளதுகுறிப்பிடத்தக்கது .