இந்தியாவுக்கு சென்று திரும்பியதில் இருந்து யாரிடமும் நான் கைகுலுக்குவதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார் .  அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின் போது கை கொடுக்காமல் அவர் வணக்கம் சொன்னதற்கு இவ்வாறு விளக்கமளித்துள்ளார் .  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் இந்திய பாரம்பரிய முறைப்படி கைகூப்பி வணக்கம் சொல்லும் முறையை  பல்வேறு நாட்டினர் பின்பற்றி வருகின்றனர். இதில்  இந்தியாவின்  பரம்பரியம்  உலக அளவில் புகழ் பெற்று வருகிறது .  சீனாவில் தோன்றிய கொரோனா  வைரஸ் சுமார் 100க்கும் அதிகமான  நாடுகளில் பரவி உள்ளது .  இதுவரை 4000 க்கும் அதிகமானோர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் . 

உலக அளவில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  உலகில் பல்வேறு நாடுகள் கொரோனா  வைரசை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்  ஒருவரையொருவர் தொடுதல் மூலமாகவும் கொரோனா பரவ வாய்ப்பு  உள்ளது எனவும்,   சுமார் 50 சதவீதம் அளவிற்கு  கைகுலுக்குவதால் கொரோனா பரவுவதாக ஆய்வில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . எனவே கைகளை சுத்தமாக  கழுவுவதன்  மூலமாகவும் மற்றவர்களுக்கு கை  கொடுப்பதை தவிர்ப்பதன் மூலமாகவும்  கொரோனா நோயிலிருந்து தப்பிக்க முடியும் என்பதால் பல்வேறு  நாட்டினர் இந்திய முறைப்படி  கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறையைப் பின்பற்றி வருகின்றனர் .

 

இந்நிலையில்  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ,   அயர்லாந்துபிரதமருடனான சந்திப்பின் போது கை கொடுக்காமல் வணக்கம் சொன்னது பற்றி விளக்கமளித்துள்ளார் அதாவது கைகொடுக்காமல் இந்திய முறையில் வணக்கம்  சொல்வது எளிதாகவும் அதேபோல் பாதுகாப்பானதாகவும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.   சமீபத்தில் இந்தியா வந்திருந்த  அதிபர் பாம்புக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டு உபசரிக்கப்பட்டார், பின்னர்  பயணம் முடித்து அமெரிக்கா திரும்பிய அவர் ,  இந்தியாவின் பாரம்பரியத்தையும்  கலாச்சாரத்தையும் அமெரிக்க மேடைகளில் பேசி புகழ்ந்து தள்ளிவருகிறார். இந் நிலையில் கொரோனா பரவி வருவதால் அவர் கை கொடுப்பதை தவிர்க்கும் வகையில்  இந்திய பாரம்பரிய முறைப்படி அவர் கைகூப்பி வணக்கம் கூறி வருவது  இந்திய கலாச்சாரத்தை உலகறிய செய்துள்ளது குறிப்பிடதக்கது.