ஈரான் அடித்தஅடியில் அலறிய அமெரிக்கா...!! போர் நடத்த விருப்பமில்லை என பதுக்கினார் ட்ரம்ப்...!!
ஆனால் அவர் இவ்வாறு தெரிவித்த சில மணிநேரங்களிலேயே ஈரான் மறுபடியும் அமெரிக்க துருப்புகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .
ஈரான் மீது போர் தொடுக்க அமெரிக்கா விரும்பவில்லை அதை தனிமைப்படுத்தவே அமெரிக்கா விரும்புகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென தன் நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கியுள்ளார் . அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அமைதிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையிலும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது . கடந்த வாரம் அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார் .
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுக்கு சொந்தமான அல் அசாத் விமானதளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது . இது மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி உள்ளது என சர்வதேச அரசியல் நோக்ககர்கள் கணித்துள்ளனர் . இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் என்றும் போர் தொடுப்பதை அமெரிக்கா விரும்பவில்லை ,
போர் எல்லா விஷயங்களுக்கும் தீர்வாக அமையாது, அதனால் போரை அமெரிக்கா விரும்பவில்லை , ஈரானை தனிமைப்படுத்தவே அமெரிக்கா விரும்புகிறது . எனவே ஈரான் மீதான நடவடிக்கையை நாங்கள் நிர்வாக ரீதியாக மேற்கொள்வோமே தவிற ஆயுத ரீதியாக இல்லை... ஈரான் மீது பொருளாதார தடை விதிப்போம் , ஈரானை உலக நாடுகளை ஒன்றிணைத்து தனிமைப்படுத்துவோம், அதேநேரத்தில் ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது.என்ற அவர், தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை தொடரும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவை மிரட்டும் போக்கை ஈரான் இத்துடன் கைவிட வேண்டும் ஆனால் ஈரான் எதையுமே காதில் போட்டுக் கொள்வதில்லை, ஈராக்கில் இருக்கும் அமெரிக்க விமான தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது கண்டனத்திற்கு உரியது என ட்ரம்ப் அமைதியை நிலைநாட்டும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார் . ஆனால் அவர் இவ்வாறு தெரிவித்த சில மணிநேரங்களிலேயே ஈரான் மறுபடியும் அமெரிக்க துருப்புகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது . சுலைமானியின் மரணம் ஈரானை அந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்பதே காரணம் என்கின்றனர். அத்துடன் ஈரானுக்கு மறைமுகமாக பல நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதும் இதற்கு காரணம் என்கின்றனர்.