சீன வைரசால் தடுமாறும் அமெரிக்கா... !! கெத்து விடாமல் போராடும் அதிபர் டிரம்ப்...!!!

 இந்த நெருக்கடியான நிலையில் உங்களுக்காக போராடும் ஜனாதிபதியாக நான் இருக்கிறேன் நீங்கள் அதை உறுதியாக நம்பலாம் .  நாம் வெல்லும்வரை நான் சீனா வைரஸ் போரை நிறுத்த மாட்டேன் முதலில் நாம் எதிர்பார்த்ததைவிட வெற்றி நமக்கு  மிக விரைவில் கிடைக்கும்

american president trump confident speech american city sons against china virus

அமெரிக்காவில் சீனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 தாண்டியுள்ளது சுமார் 34 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . நான்கு பேரில் 3 அமெரிக்கர்கள்  வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது . சீனா வைரஸ் குறித்து தகவலை தொகுத்து வெளியிடும் வலைதளம் ஒன்று இத்தகவலை தெரிவித்துள்ளது .  இந்நிலையில் அமெரிக்காவில் குறைந்தது 33 ஆயிரத்து 546 அமெரிக்கர்கள், சீனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக குடியரசு கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர் கென்டக்கி  ரான்ட் பால் தெரிவித்துள்ளார் .  அதே நேரத்தில் சுமார் 419 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .  ரான்ட் பால்  சீன வைரஸ் தாக்கம் உள்ளதாக பரிசோதிக்கப்பட்ட முதல் செனட் உறுப்பினர் ஆவர் . அவர் தற்போது  தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . 

american president trump confident speech american city sons against china virus

 இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ,  நியுயார்க் ,  கலிபோர்னியா மற்றும் வாஷிங்டன் ஆகிய மூன்று முக்கிய மாகாணங்களில் சீனா  வைரஸ் தீவிரமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது  சுமார் 15000 பேருடன் நியுயார்க் மாகாணம் பாதிப்பில்  முதலிடத்தில் உள்ளது .  கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 ஆயிரத்து 418 பேருக்கு சீனா வைரஸ்  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  நியூயார்க்கில் மட்டும் 114 பேர் உயிரிழந்துள்ளனர் அடுத்த 10 நாட்களில் நியூயார்க் அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் வினியோக பற்றாக்குறையை நோக்கி செல்கிறது என மேயர் பில் டி பிளாசியோ தெரிவித்துள்ளார் .  சீனா வைரஸ்  குறித்து தெரிவித்துள்ள அவர் மக்களுக்கு அதிக காற்றோட்டம் கிடைக்கவில்லை மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்  என்று அவர் கூறினார் .  இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய  துணை தலைவர் மைக் பென்ஸ் ,  இதுவரை அமெரிக்காவில்   2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சீன வைரஸ்  சோதனை செய்யப்பட்டுள்ளது என்றார் .  இந்நிலையில் நியுயார்க் ,  கலிபோர்னியா ,  வாஷிங்டன் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விரைந்து வந்து கொண்டிருக்கிறது யாரும் கலங்க தேவையில்லை  என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். 

american president trump confident speech american city sons against china virus

இந்நிலையில் நியூயார்க்கில் கூடுதலாக 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவ வசதியும் ,  கலிபோர்னியாவுக்கு கூடுதலாக 2000 படுக்கை வசதி கொண்ட மருத்துவ வசதியும் வாஷிங்டன் மேற்கு 1000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ வசதியும் செய்யப்பட்டுள்ளது என ட்ரம்ப்  தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆயிரக்கணக்கான முகமூடிகள் மற்றும் சோதனைக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .  அனைத்து அமெரிக்கர்களுக்கும் இது சவாலான நேரம் என்று கூறிய அவர்,   ஒரு பயங்கர தேசிய சோதனையை  நாம் எதிர் கொண்டு இருக்கிறோம் என அவர் தெரிவித்தார் .  இந்த நெருக்கடியான நிலையில் உங்களுக்காக போராடும் ஜனாதிபதியாக நான் இருக்கிறேன் நீங்கள் அதை உறுதியாக நம்பலாம் .  நாம் வெல்லும்வரை நான் சீனா வைரஸ் போரை நிறுத்த மாட்டேன் முதலில் நாம் எதிர்பார்த்ததைவிட வெற்றி நமக்கு  மிக விரைவில் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார் .

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios