ஐஎஸ்ஐஎஸ் தலைவன் அல்பாக்தாதியை துரத்திய நாய்..!! வெள்ளை மாளிகையில் வைத்து விருது கொடுத்த ட்ரம்ப்..!!
குண்டு வெடிப்பு காயங்களிலிருந்து தேரிய நாய் கோனனை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து, விருது வழங்கி கௌரவித்தார், அதைத்தொடர்ந்து நாயை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துவைத்த ட்ரம்ப், இம்மோப்ப நாயை தான் மிகவும் நேசிப்பதாக தெரிவித்தார்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் தலைவன் அல்பாக்தாதியின் மரணத்திற்கு காரணமாக இருந்த ராணுவ மோப்ப நாயை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கௌரவித்து உள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதி, பல ஆண்டுகளாக அமெரிக்க படைகளின் கண்ணில் மண்ணைத் தூவி தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
அவர் சிரியாவின் மலைக் குகைகளில் பதுங்கியிருப்பதாக அமெரிக்க ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதனையடுத்து அல்-பாக்தாதி பதுங்கியிருந்த அமெரிக்க படை அவரை சுற்றி வளைத்தது அதில் தப்பிச் செல்ல வழி இல்லாத நிலையில் அல் பாக்தாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்தார் . முன்னதாக ஆல் பாக்தாதியின் மறைவிடத்தை கண்டுபிடிப்பதில் அமெரிக்க ராணுவத்தின் மோப்ப நாய் கோனன் முக்கிய பங்காற்றியது. அல் பாக்தாதியின் இருப்பிடத்தை மோப்பம் பிடித்து அவரை விரட்டி சென்றது. அப்போது தப்பிக்க முடியாமல் அல் பாக்தாதி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் நாய் காயம் அடைந்தது . இந்நிலையில் மோப்ப நாய் கோனனை வெகுவாகப் பாராட்டி அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாக்தாதியை விரட்டியடித்து தற்கொலை செய்யத் தூண்டிய தீரமான நாய் எனக்கூறி அதன் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டார்.
இந்நிலையில் குண்டு வெடிப்பு காயங்களிலிருந்து தேரிய நாய் கோனனை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து, விருது வழங்கி கௌரவித்தார், அதைத்தொடர்ந்து நாயை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துவைத்த ட்ரம்ப், இம்மோப்ப நாயை தான் மிகவும் நேசிப்பதாக தெரிவித்தார். உலகின் ஆகச் சிறந்த நாய்களுள் ஒன்றாக கோனன் திகழ்வதாகவும் இது தமக்கு பெருமை அளிப்பதாகவும் உள்ளது என அப்போது அவர் தெரிவித்தார்.