இனி முடிந்தது சீனாவின் கதை, அமெரிக்கா எடுத்த பயங்கர முடிவு ..!! வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் திட்டவட்டம்..!!
கொரோனாவால் ஏற்பட்ட பேரிழப்புக்கு சீனா மீது அபராதம் விதிப்பது தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்ப் முடிவு செய்வார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ கடந்த மே 16-ம் தேதி அன்று தெரிவித்திருந்தார்.
சீனா மீது அமெரிக்கா சில முக்கிய முடிவுகளை வெள்ளிக்கிழமை (இன்று) அறிவிக்கும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். கொரோனா வைரசுக்கு சீனா தான் காரணமென அமெரிக்கா குற்றம் சாட்டி வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். சீனாவின் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது, இதில் 150-க்கும் அதிகமான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேர் இந்த வைரசுக்கு பலியாகியுள்ளனர். சீனாவில் தோன்றிய இந்த வைரசால் உலக வல்லரசான அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் நிலைகுலைந்து போயுள்ளது. இந்நிலையில் மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்தது என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் சீனாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், வுஹான் ஆய்வுக் கூடத்திலிருந்து வைரஸ் கசிந்தது என்ற குற்றசாட்டின் அடிப்படையில் நடத்தப்படும் சர்வதேச விசாரணைக்கு ஒப்புக் கொள்ளுமாறு ட்ரம்ப் சீனாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். அதேபோல் சீனாவில் வைரஸ் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் நிறைய உள்ளது எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தொடர்ந்து கூறிவருகிறார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனாவால் இந்த உலகத்தில் ஏற்பட்டிருக்க சோகமான சூழ்நிலை மிகுந்த வேதனை அளிக்கிறது. இது ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது, இந்த வைரஸ் ஆரம்பத்தில் தோன்றிய போதே சீனா இதை தடுத்திருக்க முடியும், ஆனால் ஏனோ அது அப்படி செய்யவில்லை. இந்நிலையில் நாளை நாங்கள் சீனா குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப் போகிறோம், அதில் சீனா தொடர்பாக நாங்கள் சில முக்கிய முடிவுகளை அறிவிக்க போகிறோம். அவை என்ன என்பது குறித்து நாங்கள் விரிவாக விவாதிப்போம் என வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (நேற்று) செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போனது சீனாவின் இயலாமையை காட்டுகிறது என கடந்த சில வாரங்களாக ட்ரம்ப் சீனாவை விமர்சித்து வந்தார். அதேபோல் மே -14ஆம் தேதியன்று சீனாவுடன் முழு உறவையும் அமெரிக்கா துண்டித்துக் கொள்ளும் என அவர் மிரட்டினார். கொரோனாவால் ஏற்பட்ட பேரிழப்புக்கு சீனா மீது அபராதம் விதிப்பது தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்ப் முடிவு செய்வார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ கடந்த மே 16-ம் தேதி அன்று தெரிவித்திருந்தார். அதற்கு மறுநாள் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச தனக்கு விருப்பமில்லை என தனது வெறுப்பை வெளிப்படுத்தினார். கொரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்கா சீனா மீது தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வரும் நிலையில், சீனா மீது முக்கிய முடிவு எடுக்கப் போவதாக அவர் அறிவித்திருப்பது சர்வதேச அளவில் முக்கிய கவனம் பெற்றிருக்கிறது.