சீனாவை ஒழிக்க இந்தியாவுடன் கைகோர்த்த அமெரிக்கா..!! இலவசமாக வென்டிலேட்டர்கள் வழங்க முடிவு..!!

தெற்காசியாவில் சீனாவுக்கு இணையான வலிமையுடன்  இந்தியா  இருந்து வரும் நிலையில் , சீனாவை ஒரங்கட்ட  அமெரிக்கா இந்தியாவுடன் நட்பு  பாராட்ட விரும்புகிறது என்பதையே இது காட்டுகிறது .  

american president trump announce free ventilator for India

கொரோனாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படும் என்றும் , கண்ணுக்குத் தெரியாத எதிரியை ஒன்றிணைந்து வீழ்த்துவோம் எனவும்  அதிபர் டொனால்டு ட்ரம்ப் சூளுரைத்துள்ளார் .  கொரோனா விவகாரத்தில் சீனாவுடன் அமெரிக்காவிற்கு மோதல் இருந்து வரும் நிலையில் , டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , இந்நிலையில்  உலக அளவில் 46 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய் தொற்று ஆளாகியுள்ளனர்.  இதுவரை  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது .அமெரிக்கா ஸ்பெயின் ரஷ்யா பிரிட்டன் இத்தாலி பிரேசில் பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மீது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவிலேயே அதிக நோய்த்தொற்றும் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவின் பொருளாதாரம் வரலாறுகாணத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது . 

american president trump announce free ventilator for India

தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கிற பாதிப்புக்கு சீனா தான் காரணமென அமெரிக்கா சீனாவின் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் இரு நாட்டுக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது .  அதுமட்டுமில்லாமல் சீனா உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்ள நேரம் வந்துவிட்டது என ட்ரம்ப்  காட்டமாக தெரிவித்துள்ளார் . இந்நிலையில்  தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ள ட்ரம்ப் , கொரோனா வைரசுக்கு எதிரான போரை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து  எதிர் கொள்ளும் என தெரிவித்துள்ளார் . கண்ணுக்குத் தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம்  என தெரிவித்துள்ளார் . மேலும் , பிரதமர் நரேந்திர மோடி எனக்கு மிகவும் நல்ல நண்பர் என்பது எல்லோருக்கும் தெரியும் , இந்நிலையில் கொரோனாவுக்கு  எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வெண்டிலேட்டர்களை அமெரிக்கா நன்கொடையாக வழங்கும் .  அதேபோல கொரோனா வைரசுக்கு  இந்த ஆண்டுக்குள் மருந்து கிடைத்துவிடும் என நம்புகிறேன் . 

american president trump announce free ventilator for India

தடுப்பூசி ஆராய்ச்சியில் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா  செயல்பட்டு வருகிறது ,  இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து அமெரிக்கா வீழ்த்தும் என பதிவிட்டுள்ளார் .  சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் உருவாகியுள்ள நிலையில் ட்ரம்ப் இந்தியாவை தன் நண்பனாக காட்ட முயற்சி செய்துள்ளார் .  தெற்காசியாவில் சீனாவுக்கு இணையான வலிமையுடன்  இந்தியா  இருந்து வரும் நிலையில் , சீனாவை ஓரங்கட்ட  அமெரிக்கா இந்தியாவுடன் நட்பு  பாராட்ட விரும்புகிறது என்பதையே இது காட்டுகிறது .  அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவில் வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன் வென்டிலேட்டர் தயாரிப்பில் அந்நாடு கவனம் செலுத்தி வந்த நிலையில் ,  இதுவரையில் அங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான வெண்டிலேட்டர்கள்  அமெரிக்காவில் செய்யப்பட்டுள்ளன . அந்நாட்டில்  வென்டிலேட்டர் அவசியம் குறைந்துள்ளதால் கையிருப்பில் உள்ள  ஏராளமான வென்டிலேட்டர்களை  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா முயற்சித்து வருகிறது , இந்நிலையில் நட்பு அடிப்படையில் இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை இலவசமாக வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios