கொரோனா பாதித்த சீன பயணிகளை தடுக்க தவறிய ஐரோப்பா...!! உள்ளே வராதே என கறார் காட்டும் அமெரிக்கா...!!
நாட்டுமக்களுக்கு உரையாற்றிய அவர், கொரோனா வைரஸில் பிறப்பிடமான சீனாவில் இருந்து வரும் பயணிகளை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் தவறிவிட்டன இதனால் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது எனவே ஐரோப்பியர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்படுகிறது ,
ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வர நாளை முதல் 30 நாட்களுக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் . நாளுக்கு நாள் அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் இம்முடிவெடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பல நாடுகளில் மிகத்தீவிரமான தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா , ஜப்பான் , தென் கொரியா , ஈரான் , இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் சுமார் 4627 பேர் பலியாகியுள்ளனர் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . அமெரிக்காவிலும் இந்த வைரசுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதுவரை அமெரிக்காவில் இந்த வைரசுக்கு 31 பேர் உயிரிழந்துள்ளனர் . ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வர 30 நாட்களுக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார் . அதேபோல் பிரிட்டனுக்கு தடை பொருந்தாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் .
நாட்டுமக்களுக்கு உரையாற்றிய அவர், கொரோனா வைரஸில் பிறப்பிடமான சீனாவில் இருந்து வரும் பயணிகளை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் தவறிவிட்டன இதனால் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது எனவே ஐரோப்பியர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்படுகிறது , வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் அனுமதிக்கப்படுவார் என டிரம்ப் தெரிவித்தார் . அதேபோல கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள வாஷிங்டன் , பிரான்சிஸ்கோவில் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வாஷிங்டனில் பொது சுகாதாரத்துறை அவசர பிரகடனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .