உலக சுகாதார நிறுவனத்தை மிரட்டிய ட்ரம்ப்..!! உச்சகட்டத்தில் சீனா அமெரிக்கா மோதல்..!!
இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெட்ரோஸ் அதானாம் தொடர்ந்து சீனாவுக்கு சாதகமாக நடந்துவருகிறார்,
உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், ஒரு சார்பு நிலையை உலகச் சுகாதார நிறுவனம் கடைப்பிடித்து வருவதாகவும் எனவே அந்நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை நிறுத்தப்போவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , இதுவரையில் 14 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்பது 82 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரையில் இந்த வைரசில் இருந்து 3 லட்சம் பேர் குணமாகி உள்ளனர். இந்நிலையில் மற்ற நாடுகளைவிட அமெரிக்கா இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . அமெரிக்காவில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது .
இந்த வைரசில் இருந்து மீள வழி தெரியாமல் திணறி வரும் அமெரிக்கா, தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலைக்கு முழு பொறுப்பு சீனாதான் என தனது கோபத்தையும் ஆற்றாமையையும் சீனா மீது வெளிப்படுத்தி வருகிறது , அதேபோல் சீனா கொரோனா வைரஸ் விவகாரத்தில் உண்மையை மறைக்கிறது என்றும், அது வைரஸ் குறித்து தெரிவிக்கும் புள்ளி விவரங்கள் , அதாவது , பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயரிழந்தவர்களின் விவரங்கள் நம்பத் தகுந்தவையாக இல்லை என்றும், எண்ணிக்கையை சீனா குறைத்து கூறி வருகிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டிவருகிறார். அவருடன் அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளும் இதே குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். இது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வார்த்தை போராக மாறியுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தில் இயக்குனர் டெட்ரோஸ் அதானாம் , சீனா சரியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதின் மூலம் கொரோனாவை வென்றுள்ளது .
சரியான நேரத்தில் எடுத்த ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் சமூக விலகல் நடவடிக்கைகள் மூலம் , சீனாவில் கொரோனா முழுமையாக கட்டுபடுத்தப்பட்டுள்ளது. சீனா சிறப்பாக செயல்பட்டதின் விளைவாக தற்போதைய சீனாவிலிருந்து முற்று முதலாக கொரோனா துடைத்தெறிய பட்டுள்ளது , சீனாவை முன்மாதிரியாக கொண்ட மற்ற நாடுகளும் செயல்பட வேண்டும் என்றும் அதானாம் சீனாவை வெகுவாக பாராட்டியுள்ளார், அத்துடன் சீன மக்களுக்கும் சீன அதிபருக்கும் எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் என அவர் தெரிவித்துள்ளார் . இது அமெரிக்காவுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது , இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெட்ரோஸ் அதானாம் தொடர்ந்து சீனாவுக்கு சாதகமாக நடந்துவருகிறார், சீனாவின் தவறான தகவல்களை அவர் தொடர்ந்து அதரிப்பது ஒரு சார்பு நிலையாகும், சீனா கொடுக்கும் அதிக நிதியை பெற்றுக் கொண்டு அவர் இவ்வாறு பேசுகிறார் என தெரிவித்துள்ள ட்ரம்ப், எனவே உலகச் சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளார்.