கொரோனாவால் எங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை...!! 17 பேரை பறிகொடுத்தும் பந்தாகாட்டும் அமெரிக்க அதிபர்..!!
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 70க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது . இது உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயாக மாறியுள்ள நிலையில் இந்த வைரசுக்கு இதுவரை சுமார் 3500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவே என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார் . ஒட்டுமொத்த உலக அளவில் கணக்கிடும் போது அமெரிக்க மக்கள் இந்த வைரசுக்கு குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 70க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது . இது உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயாக மாறியுள்ள நிலையில் இந்த வைரசுக்கு இதுவரை சுமார் 3500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் . இந்த வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் வைரஸ் வேகமாக பரவி வருகிறது , அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . கடந்த 3 மாதத்துக்கு மேலாக சீனாவில் கொடூர முகத்தை காட்டிவரும் கொரோனாவின் வீரியம் சீனாவில் சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது . நோய் பாதிப்பிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் , இந்த வைரசுக்கு 17 பேர் பலியாகியுள்ளனர் , சுமார் 299 பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைவுதான் எனக் கூறியுள்ளார் . ஒட்டுமொத்த நோய் தாக்கத்தையும் கணக்கிடும்போது அமெரிக்க மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறைவு என அவர் கூறியுள்ளார்.