அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதையடுத்து  அங்கு அவசர நிலை பிரகடனத்தை அதிபர்  டிரம்ப் அறிவித்துள்ளார் .  அமெரிக்காவில் இதுவரை 41 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .   சீனாவில் தோன்றிய கொரோனா  உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது .  100 க்கும் அதிகமான நாடுகளில்  இந்த வைரஸ் உள்ளது ,  சுமார்  லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் உலக அளவில் இந்த வைரசுக்கு  5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் .  இந்த கொரோனா  வைரஸ் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை . 

அங்கு  மிக வேகமாக அது பரவி வருகிறது,  இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது,   இதுவரையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால்  சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக  50 பில்லியன் டாலர்களை அமெரிக்கா ஒதுக்கி உள்ளது என்றார்.  மேலும் எதிர் வரும் நாட்களில் நாம் அனைவரும் மாற்றங்கள் மற்றும் தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும்.  இந்த குறுகிய கால தியாகங்கள் நமக்கு நீண்டகால ஆதாயத்தை தரும் எனக் கூறினார் . அடுத்த எட்டு வாரங்கள் மிக முக்கியமானது எனக்  கூறினார். 

அதேபோல் கொரோனா முன்னெச்சரிக்கையாக ஐநா ஊழியர்கள் தொலைபேசி மற்றும் இணையதளம் வழியாக ஏப்ரல் 12 வரை பணி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது .  அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பணியாளர்கள் நியுயாருக்கில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் மோடி குறித்தும் இந்திய பயணத்தை குறித்தும்  கூறிய அவர் ,  மோடி எனது நெருங்கிய நண்பர் ,  அவர் எனக்கு மட்டுமல்ல அவரது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்த நண்பர் ஆவார் .  அவருடன் பயணித்த 2  நாட்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது .  அந்த இரண்டு நாட்களில் அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார் என ட்ரம்ப் கூறியுள்ளார் .