இந்தியாவில் பார்த்த கூட்டதைப் போல் எங்குமே பார்த்ததில்லை..!! சொல்லி சொல்லி வியக்கும் அதிபர் ட்ரம்ப்...!!

அதாவது இந்தியாவில் உண்மையில் அவர்களிடம் ஒரு லட்சத்து 29 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட மைதானம் உள்ளது .  அதை நீங்கள் பார்த்தீர்களா.?

american president Donald trump exciting about Indian tour and crowed

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்  இந்தியாவையும் இந்தியாவில் தான்  மேற்கொண்ட பயணத்தையும்  நினைவுகூர்ந்து பாராட்டிவருகிறார்.  இந்திய பயணம்  மறக்க முடியாத பயணம் என ஏற்கனவே அவர் பாராட்டி இருந்த நிலையில்,  மீண்டும் மீண்டும் அவர் இந்திய பயணத்தை கூறி சிலாகித்து வருவது. இந்தியாவுக்கு பெருமிதத்தையும்  கவுரவத்தையும் ஏற்படுத்தியுள்ளது .  சமூகத்தில் இந்தியாவுக்கு  பயணம் செய்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்  தனது இந்தியப் பயணம் குறித்து அங்கு பல நிகழ்ச்சிகளில் புகழ்ந்து பாராட்டி வருகிறார்

.  american president Donald trump exciting about Indian tour and crowed

குறிப்பாக சர்தார் வல்லபாய் பட்டேல்  அரங்கத்தில் நமஸ்தே ட்ரம் நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த ட்ரம்ப் அதை வெகுவாக பாராட்டினார் .  ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மத்தியில் உரையாற்றியதை அவர் செல்லும் இடமெல்லாம் கூறி வருகிறார் . சமீபத்தில்  தெற்கு கரோலினாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போது இதுதொடர்பாக கூறிய அவர்,   இதை உங்களிடம் கூறுவதை நான் வெறுக்கிறேன் ,அதாவது இந்தியாவில் உண்மையில் அவர்களிடம் ஒரு லட்சத்து 29 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட மைதானம் உள்ளது .  அதை நீங்கள் பார்த்தீர்களா.?  அது முற்றிலும் நிரம்பியிருந்தது  அதைவிடவும் அதிகம் கூடினார்கள் என்று தெரிவித்தார். 

american president Donald trump exciting about Indian tour and crowed

மேலும் அவர் கூறும்போது ,  இந்தியாவுக்கு சென்று வந்த பிறகு இனு ஒரு கூட்டத்தை பார்த்து நான் ஒருபோதும் உணர்ச்சிவசப்பட மாட்டேன், இதை நினைத்து பாருங்கள் அவர்கள் 150 கோடி பேர்,   நாமோ 35 கோடி,  ஆனால் நாமும்  சிறப்பாக செயலாற்றினோம்.   உங்களிடம்  நான் சொல்ல வருவது என்னவென்றால் ,  நான் இந்த கூட்டத்தையும் நேசிக்கிறேன் அந்த கூட்டத்தையும் நேசிக்கிறேன் ,  அதனால்தான் அது பயனுள்ள பயணமாக இருந்தது என கூறுகிறேன்.  அதேபோல் மோடி குறித்து கூறியவர் ட்ரம்ப் ,   மோடி மிகப்பெரிய மனிதர் இந்திய மக்கள் அவரை வெகுவாக நேசிக்கின்றனர் என புகழ்ந்தார் .

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios