சீனாவை பாய்ந்து அடிக்க தயாராகும் அமெரிக்கா..!! உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ட்ரம்புக்கு ஆலோசனை..!!
குறிப்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு தளவாடங்களின் முக்கியமானதாக கருதப்படும் பொருட்களின் விநியோகத்தில் சீனாவே குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. அமெரிக்கா இனி இதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள வேண்டும் என செனட் உறுப்பினர்கள் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர் .
உலகில் சுமார் 184 நாடுகள் முடங்கும் சூழலை சீனா ஏற்படுத்திவிட்டது, இந்த வைரசை சரியான நேரத்தில் எச்சரிக்க தவறியதன் விளைவை உலகம் சந்தித்துக்கொண்டிருக்கிறது, என மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ஆற்றாமையை சீனா மீது வெளிப்படுத்தியுள்ளார் . இந்நிலையில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு சீனாதான் பொறுப்பு ஜெர்மனியில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு 140 பில்லியன் யூரோவை இழப்பீடாக சீனா வழங்கவேண்டுமென ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது . இந்நிலையில் இதை சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலகம் இந்த அளவிற்கு மோசமான பாதிப்பை சந்தித்து வருவதற்கு சீனாவே காரணம் ,ஆரம்பத்திலேயே இந்த வைரஸ் குறித்து எச்சரிக்கை செய்திருந்தால் உலக நாடுகள் இதில் இருந்து தப்பித்து இருக்கும் என கூறியதுடன், ஜெர்மனி கேட்ட தொகையைவிட அமெரிக்க சீனாவிடம் அதிக இழப்பீடு கேட்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை நான் ஏன் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் எனறால், பாதிப்புகள் நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு உள்ளது. சீனா ஆரம்பக்கட்டத்திலேயே எச்சரித்திருந்தால் உலக நாடுகளில் இந்த அளவிற்கு உயிரிழப்புகளும் பொருளாதாரச் சரிவும் ஏற்படாமல் தவிர்த்திருக்க முடியும் என தெரிவித்துள்ள அவர், சீனாவிலேயே இந்த வைரஸ் தடுத்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் ஆனால் இது 184 நாடுகளுக்கு பரவிவிட்டது , மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர், 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என கூறியுள்ளார். தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இம் மிகப்பெரிய பாதிப்பை அடுத்து அமெரிக்கா தாது மற்றும் மூலப்பொருட்களுக்காக சீனாவை சார்ந்து இருப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்க செனட் உறுப்பினர்கள் ட்ரம்பிடம் வலியுறுத்தியுள்ளனர்.
செனட் உறுப்பினர் டெட் குரூஸ் மற்றும் அவரது சகாக்கள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் மற்றும் உள்துறைச் செயலாளர் டேவிட் பெர்னாட் ஆகியோர் அமெரிக்க பாதுகாப்பு தளவாடங்கள் தொழில்நுட்ப உபகரணங்கள் என அமெரிக்கா உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்திற்கும் மூலப்பொருட்கள் சீனாவிலிருந்தே பெறப்படுகிறது. இந்நிலையில் தாதுப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கு சீனாவையே சார்ந்து இருப்பதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர். பாதுகாப்பு துறை சார்ந்த மூல பொருட்களுக்கு சீனாவை சார்ந்திருப்பது அமெரிக்க பாதுகாப்புக்கு நல்லது அல்ல , அச்சுறுத்தலாக மாற வாய்ப்புள்ளது என ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு பாதுகாப்பு தொழில்துறை அடிப்படை அறிக்கை எச்சரித்துள்ளது . குறிப்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு தளவாடங்களின் முக்கியமானதாக கருதப்படும் பொருட்களின் விநியோகத்தில் சீனாவே குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. அமெரிக்கா இனி இதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள வேண்டும் என செனட் உறுப்பினர்கள் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர் .
அதில் 13 வகையான உலோகங்கள் மற்றும் தாதுக்கள் 100 சதவீதம் அளவிற்கு சீனாவில் இருந்தே அமெரிக்கா இறக்குமதி செய்துவருகிறது, மேலும் 10 வகையான தாதுக்களுக்கு 75 சதவீதத்துக்கும் அதிகமாக சீனாவிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்கிறது . எனவே பாதுகாப்பு விவகாரத்தில் சீனாவை அமெரிக்கா நம்பியுள்ள நிலையில் நாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ராணுவத்தை தயார் நிலையில் வைக்க தேவைப்படும் நேரங்களில் அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் , திடீரென விநியோகத்தை நிறுத்த வாய்ப்புள்ளது என செனட் உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர் . அதேபோல் அமெரிக்காவில் ஏற்பட்ட இழப்பிற்கு சமமாக சீனாவிற்கு நாம் தரவேண்டிய கடன்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என செனட் உறுப்பினர்கள் ட்ரம்பிடம் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.