அமெரிக்காவில் மக்கள் கொத்துக்கொத்தாக கொரோனாவுக்கு பலியாகி வரும் நிலையில்  அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் இப்போது தேவைக்கு அதிகமாக வென்டிலேட்டர்கள் கையிருப்பில் உள்ளதாகவும் இப்போது வென்டிலேட்டர்களின்  ராஜா அமெரிக்காதான் என்று பெருமிதம் தெரிவித்து வருகிறார் .கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது .  உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த வைரஸால் அமெரிக்காவே மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது ,  அங்கு மட்டும் 13 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .  இதுவரை 9 இதுவரை 80 ஆயிரத்து 787 பேர் உயிரிழந்துள்ளனர். அது அமெரிக்காவை மட்டுமல்லாது  ஒட்டு மொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது .

 

இதற்கிடையில் அமெரிக்கா தன்னுடைய நாட்டில் கொரோனாவால்  பாதிக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக அவசரகதியில் மாத்திரை மருந்து மற்றும் வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கொள்முதல் செய்வதில் தீவிரம் காட்டியது . இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் கொரோனா  வேகம் எடுத்த நிலையில் அங்கு வைரசால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிக அளவில் வென்டிலேட்டர்கள் தேவை ஏற்பட்டது இதனால் மார்ச் 27 ஆம் தேதி அன்று அந்நாட்டின் முக்கிய நிறுவனங்களுக்கு அதிபர் ட்ரம்ப் போர்கால அடிப்படையில்  வென்டிலேட்டர் உற்பத்தியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் 100 நாட்களுக்குள் 2 லட்சம் வென்டிலேட்டர்கள்  தயாரிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார் .

 

இந்நிலையில் உற்பத்தியை தீவிரப்படுத்திய  நிறுவனங்கள் மூலம்  இதுவரையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வென்டிலேட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக  தகவல்கள்  கூறப்படுகிறது . இதற்காக அமெரிக்கா மொத்தம்  3 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது ,   இந்நிலையில் வரும்  ஜூலை  மாதத்திற்குள் ஒரு லட்சம் புதிய வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் இருக்கும் என்றும்,  அது 2020ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 2 லட்சம் வென்டிலேட்டர்கள் உற்பத்தி செய்து முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகிறது.   ஆனால் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கில் நோய்த்தொற்று ஏற்பட்டு பலநூறு பேர் அன்றாடம் உயிரிழந்து வரும் நிலையில் ,  அதில் பெரும்பாலானோருக்கு வென்டிலேட்டர்  தேவை என்பது மிகக் குறைவாகவே உள்ளது.

 

இன்னும் பலர் மிதமான காய்ச்சலுடன் குணமடைகின்றனர் என்பதால் வெண்டிலேட்டர்கள் தேவை வெகுவாக குறைந்துள்ளது.  எனவே தற்போது அமெரிக்க மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கி இருக்கிறது எனவும்,  அது தேவைக்கு அதிகமாகவே உள்ளது எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்,  அமெரிக்காவின் இப்போது வென்டிலேட்டர்களின்  ராஜாவாகிவிட்டது எனவும் ட்ரம்ப் பெருமைபேசி வருகிறார்.  தேவைக்கு அதிகமாக  தங்களிடமுள்ள வென்டிலேட்டர்களை  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ,  அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது ,  தற்போது ஜப்பான் ரஷ்யா தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில் பல நாடுகளுக்கு ஒரு அதை இறக்குமதி செய்ய அமெரிக்கா யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

  

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்யாவில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ,தேவைப்படின் அமெரிக்காவிடம் வென்டிலட்டர்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.