பயங்கர அதிர்ச்சி... 1800 சிறை கைதிகளுக்கு கொரோனா..!! 38 பேருக்க வெளி மருத்துவமனைகளில் சிகிச்சை..!!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்காவின் ஓஹியோ மாகன சிறையில் சுமார் 1800 க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளுக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்காவின் ஓஹியோ மாகன சிறையில் சுமார் 1800 க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளுக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இதில் 100 சிறை ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இது அமெரிக்காவின் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது , சிறைச்சாலைகளில் வைரஸ் பரவிவிடக்கூடாது என கவனமாக இருந்து வந்த நிலையில் சிறைக்கைதிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது அங்கே புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இதுவரை உலக அளவில் 20 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
உலக அளவில் 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் , ஆனால் இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்கா கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது , அமெரிக்காவில் 7 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது , உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை அங்கு மட்டும் 40 ஆயிரத்தை கடந்துள்ளது . இந்நிலையில் அமெரிக்காவின் மத்திய மேற்கு மாணங்களில் ஒன்றான ஓஹியோ சிறையில் கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது , இதில் சுமார் 1800 சிறைக் கைதிகளுக்கும் , 100 சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பிற ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது , இது குறித்து சிறை நிர்வாகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் , அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓஹியோ மாகாணத்தில் சுமார் 11 ஆயிரத்து 600 க்கும் அதிகமானோர் கொரனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இங்கு 471 பேர் உயிரிழந்துள்ளனர் .
இந்நிலையில் சமிபத்தில் சிறையில் உள்ள சில கைதிகளுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து சிறைக்கைதிகள் அனைவருக்கும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை )கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அதில் இங்கு மொத்தம் 2500 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 1828 கைதிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, 100 சிறை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் , இதில் காய்ச்சல் , தலைவலி , மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டுவந்த 38 கைதிகள் வெளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
மற்றமுள்ள கைதிகளில் 667 பேர் தனித் தனி அறைகளில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர், மற்றவர்களுக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது, இதில் பலருக்கு வைரஸ் அறிகுறி இல்லாதபோதும் அவர்களுக்கு வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்த பரிசோதனையின் மூலம் மற்ற கைதிகளுக்கு வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது யாருக்கெல்லாம் வைரஸ் இருக்கிறதோ அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் ஆரம்பத்திலேயே இது கட்டுப் படுத்துவதற்கு பரிசோதனை ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது .