அமெரிக்கர்களை டிசைன் டிசைனாக தாக்கும் கொரோனா..!! இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகுதோ..??
கடந்த இரண்டு வாரங்களில் இளம் நோயாளிகளுக்கு திடீர் பக்கவாதம் ஏற்படுவது ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அதிர்சியூட்டுகின்றனர் ,
கொரோனா வைரஸ் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு திடீரென பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடும் என நியூயார்க் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் . திடீரென இந்த வைரஸ்கள் தன் அசாதாரண செயல்பாட்டால் இதய தமனியில் ரத்தம் உறைவதற்கு வழிவகுக்கும் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர், தற்போது இது மருத்துவ உலகத்திற்கே மிகப் பெரும் சவாலாகவும் மாறியுள்ளது . கொரோனா வைரஸ் கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேலாக மனித சமூகத்திற்கு பேர் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது . இந்த வைரசுக்கு இதுவரை உலகம் முழுவதும் சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது . இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்வேறு வகையில் புதுப்புது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன .
இந்நிலையில் உலகிலேயே கொரோனாவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இந்த வைரஸ் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது . இதுவரை கண்டிராத அளவிற்கு இந்த வைரஸால் பாதிக்கப்படும் மக்களை இது பலவகைகளில் பாதித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரத்தின் மவுண்ட் சினாய் ஹெல்த் சிஸ்டத்தின் மருத்துவர்கள் கொரோனா குறித்து அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் . அதாவது இந்த வைரஸ் தற்போது புதிதாக , 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு திடீரென பக்கவாதத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறியுள்ளனர் . இது குறித்து தெரிவித்துள்ள மவுண்ட் சினாய் மருத்துவ குழு , கொரோனா வைரஸ் அசாதாரண வழிகளில் ரத்தம் உறைவதற்கு வழிவகுக்கும் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர் . குறிப்பாக இந்த வைரஸால் அவதிப்படாத நோயாளிகளிடையே இது மோசமான பக்கவாதத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள அம்மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தாமஸ் ஆக்ஸ்லி , கொரோனா வைரஸ் பெரிய தமனிகளில் ரத்தம் உறைதலை ஏற்படுத்துகிறது . இது கடுமையான பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது எனக் கூறியுள்ளார் , ஆக்சிலியும் அவரது சகாக்களும் மாதத்திற்கு இரண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வந்த நிலையில் , கொரோனா பரவலுக்குப்பின் அதன் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர்களுக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர் . கடந்த இரண்டு வாரங்களில் இளம் நோயாளிகளுக்கு திடீர் பக்கவாதம் ஏற்படுவது ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அதிர்சியூட்டுகின்றனர் , அந்த நோயாளிகள் பெரும்பாலோனோருக்கு கடந்த கால மருத்துவ வரலாறு இல்லை என்றும் , லேசான கொரோனா அறிகுறிகளுடன் வீட்டில் இருந்தவர்கள் என்றும் மருத்துவர் ஆக்ஸ்லி கூறுகிறார்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த புதிய பிரச்சனை நியூயார்க் மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது . மருத்துவமனைக்கு வந்தால் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என அஞ்சுவதால் பலர் மருத்துமனைக்கு வர தயக்கம் காட்டுகின்றனர் என்ற அவர், உங்களில் தங்களுக்கு கொரோனா வைரஸ் அல்லது ஒருவித பக்கவாதம் ஏற்படும் அறிகுறிகள் தெரிந்தால் அவர்கள் உடனே 911 என்று என்னை அழைக்கலாம் என மருத்துவர் குழு அறிவுறுத்தியுள்ளது .