கடந்த 20 ஆண்டுகளில் 5 விதமான கொடூர தாக்குதல்கள்..!! சீனா மீது அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் பகீர் புகார்.
கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் எங்களுக்கு ஐந்து விதமான வாதைகளை சீனா கொடுத்துள்ளது என அவர் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா சீனா இடையே கருத்து மோதல் இருந்து வரும் நிலையில் வைரஸ் தொற்று ஒரு பயங்கரமான ஈரமான சந்தையில் இருந்தோ அல்லது வைரஸ் ஆய்வு கூடத்தில் இருந்தோ பரவியிருக்கலாம் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையன் தெரிவித்துள்ளார் . இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , இப்போது சீனா என்றால் யாரிடத்திலும் அதற்கு நல்ல பெயர் இல்லை தற்போது இந்த வைரஸ் எப்படி தோன்றியது எங்கிருந்து வந்தது என்ற விவகாரத்தில் அமெரிக்கா இன்னும் எதையும் உறுதியாக நம்ப வில்லை என கூறினார் . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவி வருகிறது, இதுவரையில் சுமார் 240 க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் உலகளவில் சுமார் 43 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த வைரஸால் அமெரிக்காவே மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . அமெரிக்காவில் சுமார் 14 லட்சத்துக்கும் அதிகமானோருக்கொ தொற்று ஏற்பட்டுள்ளது . அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்துள்ளது . இந்நிலையில் அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றுக்கு சீனா தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர் . இதுகுறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ , கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வு கூடத்தில் இருந்து தான் தோன்றியது , அதுமட்டுமின்றி இந்த வைரஸ் தோன்றியது போது இதை மற்ற நாடுகளிக்கு தெரியாமல் மூடி மறைந்து விட்டது .
அதனால்தான் உலகம் இந்த அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என கூறி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையன் இந்த வைரஸ் ஆய்வகத்தில் இருந்து வெளிவந்திருக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கிறது அல்லது இது ஒரு ஈரமான சந்தையிலிருந்து வந்தது என யூகங்களும் உள்ளன . சீனாவின் வுஹான் சந்தையில் விலங்குகள் மிக கொடூரமாக சித்திரவதை செய்யப் படுகின்றன என்பதை அது தொடர்பான வீடியோக்களை பார்க்கும் போதே நமக்கு புரியும், அது ஒரு பயங்கரமான இடம் எனபது தெரிகிறது , அதேபோல் சீனாவின் ஆய்வுக் கூடமும் முறையான பாதுகாப்பு நெறிமுறைகள் இன்றி செயல்படுவதாக தெரியவருகிறது . மொத்தத்தில் இது சீனாவில் இருந்து வந்தது என்பது உறுதியாகிறது , சூழலியல் சான்றுகளை ஆதாரமாக வைத்துப் பார்க்கும் பொழுது இது ஆய்வகத்தில் இருந்து வந்திருக்கலாம் என தெரிகிறது . இது வுஹானில் இருந்து வந்தது என்று எங்களுக்கு உறுதியாக தெரியும் , அதற்கான சூழ்நிலை சான்றுகள் வலுவாக உள்ளன . கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் எங்களுக்கு ஐந்து விதமான வாதைகளை சீனா கொடுத்துள்ளது என அவர் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.