பீரங்கிகள் துப்பாக்கிகள் இல்லாமல் போருக்கு செல்ல மாட்டார்கள் , ஆனால் செவிலியர்கள் மட்டும் ஏன் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலைக்கு வரவேண்டும் என அமெரிக்க மருத்துவர்கள் கேள்வி எழுப்புகின்றனர் ,  தங்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்காததை கண்டித்து  நியூயார்க் நகரில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.   கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் மனிதப் பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.  அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும்  5 ஆயிரத்தை கடந்துள்ளது.  இந்நிலையில் நியூயார்க் நகரத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.   இங்கு மட்டும் 2,300 பேர் உயிரிழந்துள்ளனர் அமெரிக்காவில் தொற்று நோயின் மையப் பகுதியாக நியுயார்க் மாறியுள்ளது.  இந்நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும்  மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தேவையான முகக் கவசங்கள்  மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் தற்போது அவர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

இந்நிலையில் நியூயார்க் மாநில செவிலியர் சங்கத்தின் தலைமையில் மான்டிஃபியோர்  மருத்துவமனைக்கு எதிரே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் அரசு தங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தராததை கண்டித்து அவர்கள் தங்கள் கைகளில் கருப்பு பட்டைகளை அணிந்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர் ,  அதேபோல் அமெரிக்க , அரசு ஊழியர்களின் பாதுகாப்பில் மெத்தனமாக இருப்பதை கண்டித்து  ஆங்காங்கே கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.    இதுகுறித்து தெரிவிக்கும் மருத்துவர்கள் சிலர்,  கொரோனா எதிர்ப்புப் போரில் முன்னணியில் உள்ள போர்வீரர்கள் நாங்கள் ,  வைரசிடமிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆயுதங்களும் கவசங்களும் எங்களிடம் இல்லை... என்கின்றனர்.   இந்நிலையில் இது குறித்து தெரிவித்த 43 வயதான பென்னி மேத்யூ என்ற செவிலியர் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகளுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சிகிச்சை அளித்ததால் தனக்கும் தொற்றுநோய் ஏற்பட்டதாகக் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் மார்ச் 28-ல் தனது காய்ச்சல் நீங்கியவுடன் மருத்துவமனை தன்னை மீண்டும் வேலைக்கு வருமாறு அழைக்கிறது, "  உங்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால் நீங்கள் வேலைக்கு வரலாமே என வற்புறுத்துகிறது "  என அவர் தெரிவித்துள்ளார் . 

இன்னும் பலர்,   முகமூடி அணிந்து வேலைக்கு வரும்படி எங்களை மருத்துவமனை அதிகாரிகள் நிர்ப்பந்திக்கின்றனர்.  அமெரிக்க மருத்துவமனைகளில் போதுமான ஊழியர்கள் இல்லை ,  பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை.  மாறாக பாதுகாப்பு உபகரணங்களை தர வேண்டியது  அரசு, அதை ஊழியர்களே செய்து கொள்ள வேண்டும் என்று சொல்வது அபத்தாமாக உள்ளது , அதே போல்   மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு போதுமான வசதிகள் இல்லை,  கதவுகள் இல்லாத கழிப்பறைகள் ,  சரியான படுக்கைவசதி  இல்லாத அறைகள் என அடிப்படை வசிதிகள் இல்லாத இடங்களில் நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய அவலம் உள்ளது என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.   இத்தனை ஆண்டுகளில் நாங்கள் எதிர் கொள்ளாத ஒரு மோசமான சூழ்நிலையில் இருக்கிறோம் என்று மருத்துவர்கள் செவிலியர்கள் கூறுகின்றனர்.  நாங்கள் அமெரிக்காவிலிருந்து கொண்டு ஒரு முகக் கவசத்திற்காக போராட வேண்டியது மிக அவமானகரமானது என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.