ஆப்கனில் இருந்து வெளியேறிய அமெரிக்கா..!! உள்ளே நுழைய திட்டம் போட்ட சீனா...!!
இந்நிலையில் ஆப்கன் சிறையிலிருந்து தாலிபான்களை விடுவிப்பதற்கு அந்நாட்டு அதிபர் ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளார். இந்நிலையில் ஆப்கன் அதிபருக்கு சீனா வாழ்த்து கூறியுள்ளது .
தாலிபன்கள் உடன் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தானிலிருந்து தனது ராணுவத்தை அமெரிக்கா திரும்பப் பெற்று வருகிறது ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அமெரிக்கா தனது ராணுவத்தை திரும்ப பெற தொடங்கியுள்ளது . ஆப்கனில் நடைபெற்று வந்த உள்நாட்டு போரை முடிவுக் கொண்டுவர அமெரிக்கா பல்வேறு முயற்ச்சிகளில் ஈடுபட்டது, அதில் ஒரு பகுதியாக தாலிபன்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது, நீண்ட முயற்சிக்குப் பின்னர் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி தாலிபன்களுடன் அமைதி ஒப்பந்தமும் ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியிலிருக்கும் அமெரிக்கப் படைகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் என்றும், அதேபோல் தாலிபன்களும் தீவிரவாத அமைப்புகளுடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளவும் ஒப்புக்கொண்டது. இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டுள்ள சுமார் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் கொண்ட அமெரிக்க படை வீரர்களில் முதற்கட்டமாக சுமார் 8000 வீரர்களை அமெரிக்கா திரும்ப பெற்றுவருகிறது. இதேபோல் ஆப்கன் தரப்பில் அதன் அதிபர் அஷ்ரப் கனி தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சிறையில் இருக்கும் தாலிபான்களை விடுதலை செய்யும்படி அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது . இதுகுறித்து முன்னதாக தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது என்றார்.
தாலிபன்களுடனான அமைதி பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து விடை பெறுகிறோம் , தாலிபன்களும் அமெரிக்காவுக்கு கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன் என கூறியிருந்தார் . இந்நிலையில் ஆப்கன் சிறையிலிருந்து தாலிபான்களை விடுவிப்பதற்கு அந்நாட்டு அதிபர் ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளார். இந்நிலையில் ஆப்கன் அதிபருக்கு சீனா வாழ்த்து கூறியுள்ளது . இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெங் சுவாங் அளித்துள்ள பேட்டியில் ஆப்கனிஸ்தான் அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ள அஷ்ரப் கனிக்கு சீனா வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது . ஆப்கன் நாட்டு மக்களின் எதிர்காலம் குறித்த முடிவுகள் சீனா மதிப்பு அளிக்கிறது . இந்த நிலையில் சீனா ஆப்கன் ஆகிய இருநாட்டு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு துறைகளிலும் புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என கூறியுள்ளார் .