விளையாடும்போது சாய்ந்த பிரோவின் கீழ் சிக்கிய சிறுவனை, இரட்டை சகோதரன் மீட்டான். இச்சம்பவம், கேமராவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் 2 வயதான இரட்டையர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு வீட்டில் உள்ள படுக்கை அறையில் இரட்டையர் இருவரும் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது, பீரோவை பிடித்து இழுத்து விளையாடியபோது, திடீரென பீரோ அவர்கள் மீது சாய்ந்தது. ஒருவன் நகர்ந்துவிட்டான். ஆனால் மற்றொரு சிறுவன், பீரோவின் கீழ் சிக்கி கதறி அழுதான். அதை பார்த்து பதற்றமடைந்த சகோதரன், அவனை காப்பாற்றும்முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.  

பல வழிகளில் முயன்றும் முடியவில்லை. இதனால், தனது 2 கைகளால் பீரோவை தூக்கினான். அப்போதும் முடியவில்லை. பின்னர் அந்த பீரோவை முழு வேகத்துடன் முன்னே தள்ளினான். இதனை பயன்படுத்தி கொண்டு, உள்ளே இருந்த சிறுவன், உருண்டு வெளியே தப்பி வந்தான். இந்த சம்பவம் படுக்கை அறையில் உள்ள கேமராவில் பதிவாகியது. 

இந்த காட்சிகளை பார்த்த பார்த்த பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், வலைதளங்களில் அந்த காட்சியை வெளியிட்டுள்ளனர்.

அதில், வீட்டில் வைக்கப்படும் பொருட்கள் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவை குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை செய்தியுடன் பதிவிட்டுள்ளனர்.