பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூத்த ஈரான், இராக் அதிகாரிகளின் கார்களை நோக்கி நேற்று நள்ளிரவில் போர் விமானங்கள் மூலமாக அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

இதில், ஈரான் உயர்மட்டத் தளபதி காசிம் சுலைமாணி மற்றும் இராக்கின் ஹஷீத் அல்-ஷாபி ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆவர்.

ஹிஸ்புல்லா அமைப்பின் தளம் மீது அமெரிக்கா கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் 25 பேர் கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து, அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டு, போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.

இதற்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், ஈரான் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.