கொரோனா எதிரொலியாக லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் அடுத்த சில ஆண்டுகளுக்கு வேலையில்லா திண்டாட்டத்திற்கு தள்ளப்படுவர் என பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர் ,  எதிர்வரும் நாட்களில் வரலாறு காணாத அளவிற்கு அமெரிக்க இளைஞர்கள் வேலையின்மைக்கு ஆளாவார்கள் என்றும் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் வேலையில்லா திண்டாட்டம்  6% மேல் உயர வாய்ப்புள்ளது என்றும் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர் . கொரோனா வைரஸ் அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது கிட்டத்தட்ட நான்கு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த வைரசுக்கு ஆளாகியுள்ளனர் இதுவரையில் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16  ஆயிரத்தை தாண்டியுள்ளது உலக வல்லரசான அமெரிக்கா இந்த வைரசில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் திணறி வருகிறது

 

மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது, இந்த வைரஸ் உச்ச கட்டத்தை அடையும் போது நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவிட்டு நிறுவனம் எச்சரித்திருந்தது.  அதனடிப்படையில் கிட்டத்தட்ட அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதத்திற்குள் சுமார் 81 ஆயிரத்து 766 பேர் உயிரிழக்கக் கூடும் என அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.  ஒரு பக்கம் மரணம் சம்பவித்துக் கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கா சந்தித்து வருகிறது ,  இது எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர் , வரும் காலத்தில் சுமார் 4 மில்லியன் மக்கள்  வேலையின்மை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என கணித்துள்ளது  , வைரஸ் தாக்கம் மேலும்  அதிகரிக்கும் பட்சத்தில்  வேலை இழப்பவர்களின்  எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியரும் முன்னாள் அரசு கருவூலத்துறை அதிகாரியுமான கரின் டைனன் கொரோனா எதிரொலியாக பல மில்லியன்  மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர், இதே நிலை நீடித்தால்  அடுத்த ஆண்டு அமெரிக்காவில் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை 6 சதவீதமாக உயரும் என தெரிவித்துள்ளார்,  தற்போதுள்ள பொருளாதார மந்த நிலையில் தற்போது வேலை இழந்தவர்கள் மீண்டும் அதே வேலையை பெறுவது கடினம் என அவர் கூறியுள்ளார்.   2020ன் இறுதியில் வேலையின்மை சதவீதம்  10 சதவீதமாக உயரும் என்றும் பின்னர் அது படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என்றும் கணித்துள்ளார்,  ஒரு வாரத்தில் மட்டும் 6.6 மில்லியன் மக்கள் வேலையின்மை நிவாரணம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக அமெரிக்க தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.  1967 ஆம் ஆண்டில் தரவைக் ஒப்பீடு செய்ததில்  இது இரண்டாவது பெரிய வேலையின்மையாக கருதப்படுகிறது.

 

மொத்தத்தில் சுமார் 16.8 மில்லியன் அமெரிக்க தொழிலாளர்கள், அமெரிக்க தொழிலாளர் நல வாரியத்தில் அதாவது சுமார் 11% பேர் வேலையின்மை நிவாரணம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.  இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக முதலாளிகள் 16 மில்லியன் முதல்  20 மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை குறைப்பார்கள் என்று பாங்க் ஆப் அமெரிக்காவின் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர், வேலையின்மை விகிதம் தற்போது முதல் ஜூன் வரை 15.6% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  அப்படியானால், வேலையின்மையில் இருந்து  மீண்டும் பழைய நிலைக்கு  திரும்புவதற்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று வருடங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.