Asianet News TamilAsianet News Tamil

முடிந்தது சீனாவின் கதை... கண்ணிமைக்கும் நேரத்தில் அதன் போர் கப்பல்களை அழிக்க வந்தது அதிநவீன ஆயுதம்..!!

தென்சீனக் கடல் பகுதியே உலகின் உச்சபட்ச பதற்றம் நிறைந்த பகுதியென உலக நாடுகள் இப்போது உச்சரித்து வருகின்றன. 

america trail for laser gun against china
Author
Delhi, First Published May 25, 2020, 10:39 AM IST

தென்சீனக் கடல் பகுதியே உலகின் உச்சபட்ச பதற்றம் நிறைந்த பகுதியென உலக நாடுகள் இப்போது உச்சரித்து வருகின்றன. அங்குள்ள தீவுகளுக்கு பல்வேறு கிழக்காசிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருவதும் பராசெல் தீவுக் கூட்டங்களில் ஒன்றான சிறிய பரப்பளவு கொண்ட டிரைடன் தீவை சீனா ஆக்கிரமித்துள்ளதும், இந்த தீவு தங்களுக்கே சொந்தம் என தைவான் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அதை எதிர்த்து குரல் எழுப்பி வருவது தென் சீன கடல் நீரை சூடாக்கியுள்ளது.  இந்த கடற்பகுதி மிக முக்கிய வர்த்தக மையமாக உள்ளதால் அங்கு சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்  தனது ராட்சத போர்கப்பல்களை களத்தில் இறக்கி இருப்பது பலநூறு பாரன்ஹீட் வெப்பத்திற்கு தென் சீன கடலை கொந்தளிக்க வைத்துள்ளது.

america trail for laser gun against china 

தென் சீன கடற் பகுதியில் தன் போர் கப்பல்களை தைவானுக்கு அருகில் நிலை நிறுத்தியுள்ளது அமெரிக்கா,  இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது சீனா ஆத்திரமூட்டும் இதுபோன்ற நடவடிக்கையை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,  இருநாடுகளுக்கும் இடையே தென் சீன கடல்  பகுதியில் பகை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.   உலகின் மிகப்பெரிய கடற்படை கொண்ட அமெரிக்கா சீனாவை எச்சரிக்கும்  வகையில் ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளது ,  அதற்கான வீடியோவையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது,  அதில்  அமெரிக்கப் போர்க்கப்பலில் நிறுத்தப்பட்டுள்ள லேசர் துப்பாக்கியால் காற்றில் சீறிப்பாயும் ஒரு விமானம் தாக்கி அழிக்கப்படுகிறது,  இந்த சோதனை சீனாவில் இருந்து சில ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் பசிபிக் கடற்படை நடத்திக்  காட்டியுள்ளது,  அமெரிக்காவிடம் எந்த நாட்டிலும் இல்லாத  ஒரு அதி பயங்கர ஆயுதம் உள்ளது அதைப் பயன்படுத்துவதற்கு பல கோடிகளை செலவழிக்க வேண்டியதில்லை ஒரே ஒரு டாலர் செலவழித்தால் போதும் ,  எவ்வளவு பெரிய  விமானத்தையும் ஒரு நொடியில்  சுட்டு வீழ்த்த  முடியுமென அமெரிக்கா அந்த வீடியோ மூலம் சீனாவை எச்சரித்துள்ளது.

america trail for laser gun against china 

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவை கலக்கமடைய வைத்துள்ளது ,  அமெரிக்க கடற்படையில் அறிமுகமாகி உள்ள இந்த லேசர் ஆயுதம் உலகம் இதுவரை பார்த்திராத ஒரு புதுவகை ஆயுதமாகும் .  இது கடலில் இருந்தாலும்  அல்லது விமானத்தில் இருந்தாலும் மிகச் சிறிய இலக்குகளைக் கூட துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.  உலகமே கொரோனா நெருக்கடியில் ஸ்தம்பித்துள்ள நிலையில் ,  மே-16 ஆம் தேதி அன்று இந்த சோதனை நடத்தப்பட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. வெளி பிராந்தியங்களில்,  தென் சீனக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் சீனாவின் ஆதிக்கத்தையும் , அதன் எதேச்சதிகாரத்தையும்  கட்டுப்படுத்த, சீனாவுக்கு ஒரு பாடம் கற்பிக்க, அமெரிக்கா எந்த அளவிற்கும் துணியும் என்பதை இது காட்டுகிறது .   யூஎஸ்எஸ் போர்ட்லேண்ட்லிருந்து அமெரிக்க கடற்படை பல்வேறு விதமான லேசர் ஆயுதங்களை சோதனை  செய்துவருகிறது ,  இந்த ஆயுதம் திடநிலை லேசர் ஆயுதம் என்று அழைக்கப்படுகிறது ,  இது அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆயுதமாகவும்,  முதல் முறையாக இது அமெரிக்காவின் பசிபிக்  கடற்படைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.  சமீபத்தில் தென்சீனக் கடல் பகுதியில் தைவானுக்கு அருகில்  சீனா மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்கள் நேருக்குநேர் நிலை நிறுத்தப்பட்டுள்ளன . அமெரிக்காவின் உளவு விமானம் சீனாவின் பேர் கப்பலால் குறிவைக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா தற்போது தனது அதி பயங்கர லேசர் ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது .  

america trail for laser gun against china

இதன்  மூலம் எந்த கடற்படை கப்பலையும் மிரட்ட முடியும்  , தென் சீனக் கடலில் அமெரிக்காவை சீனா எதிர்த்தால் அல்லது  போர் நடந்தால் அமெரிக்கா எதிர்த்து நின்று தாக்கும் என்பதை  இதன் மூலம் தெரிவித்துள்ளது.   அதேநேரத்தில் இந்த லேசர் ஆயுதத்தின் தனித்துவம் என்ன என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்,  அமெரிக்கா இந்த ஆபத்தான ஆயுதத்தை தென்சீனக் கடலில் கண்காணிப்பு பணியில் உள்ள அதன் போர்க்கப்பலில் பயன்படுத்த உள்ளது ,  இந்த ஆயுதம் நேரடி ஆற்றல் ஆயுதம் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது, நேரடி ஆற்றல் ஆயுதம்  தொடர்பான ஆராய்ச்சியில் 1960ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.  அது பல பரிணாமங்களை பெற்று அதிபயங்கர லேசர் ஆயுதமாக உருவெடுத்து நிற்கிறது.  தனக்கு எதிரில் பாய்ந்துவரும் ஆயுதங்களை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது,  இதில் லேசர் கற்றை நுண்ணலை மற்றும் துகள் கற்றை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது ,  பெரும்பாலும் இது உலகின் பல பகுதிகளில் அதிக கூட்டத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது ஆனால் இப்போது இதை அமெரிக்கா ஒரு நவீன ஆயுதமாக தயாரித்துள்ளது . காற்றில் மிக வேகமாக சீறிவரும் ஏவுகணைகளையும் அழிக்கமுடியும் ,  ஹெலிகாப்டர்களில் குறிவைத்து தாக்க முடியும் ,  பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராணுவ வாகனங்களை நுல்லியமாக குறிவைத்து  தாக்கி அழிக்க முடியும் ,  இது ஒரு லேசர் ஆயுதம் நேரம் வரும்போது சீனாவையும் வேட்டையாடும் என்கிறது அமெரிக்க கடற்படை. 

america trail for laser gun against china

அதில் நிறுவப்பட்ட ரேடியோ அதிர்வெண் சென்சார் இலக்கின் தூரத்தை துல்லியமாக கணிக்கின்றது ,  இலக்கை சரியாக குறி வைத்து பொத்தானை அழுத்தினால் அதிலிருந்து வெளிவரும் லேசர் கற்றைகள் இலக்கை ஒரு நொடியில் அழிக்கிறது .  இது 360 டிகிரியிலும் சுற்றிச்சுழலும் ,  இதில் இருந்து வெளிவரும் லேசரில் சிக்குபவர்கள் மீண்டும் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை எனவும் கூறப்படுகிறது.  இவ்வளவு ஆபத்து நிறைந்த இந்த ஆயுதத்தை அமெரிக்கா உருவாக்கியதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் சொல்லப்படுகிறது , சீனாவும்- ரஷ்யாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை  உருவாக்கியுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் அமெரிக்காவை எச்சரித்த நிலையில் அவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் வகையில்  இந்த  லேசர் ஆயுதம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . 

 

Follow Us:
Download App:
  • android
  • ios